என் மலர்
புதுச்சேரி
X
நேரு எம்.எல்.ஏ. அதிகாரிகளுடன் ஆலோசனை
Byமாலை மலர்27 Sept 2022 1:05 PM IST
- புதுவை உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி மூலம் செயல்படுத்த வேண்டிய பணிகள் குறித்து தொகுதி எம்.எல்.ஏ. நேரு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
- புதுவை நகராட்சி வாய்க்கால்களை தூர்வாருதல் போன்ற பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதி–களில் நகராட்சி மூலம் செயல்படுத்த வேண்டிய பணிகள் குறித்து தொகுதி எம்.எல்.ஏ. நேரு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
உருளையன்பேட்டை தொகுதியில் நடைபெற வேண்டிய வேலைகள், பகத்சிங் வீதி மேம்படுத்துதல், சவரி ராயலு வீதியில் புதிய சிமெண்ட் சாலை அமைத்தல், போத்தீஸ் பக்கத்து வீதி மேம்படுத்தும் பணிகள், மழைக்காலத்திற்குள் புதுவை நகராட்சி வாய்க்கால்களை தூர்வா–ருதல் போன்ற பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமார், நகராட்சி செயற்பொறியாளர் பிரபாகரன், உதவி பொறியாளர் நமச்சிவாயம், இளநிலை பொறியாளர் ஞானசேகர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
X