என் மலர்
புதுச்சேரி
குடிநீர் பற்றாக்குறையை போக்க புதிய ஆழ்துளை கிணறு
- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பணியை தொடங்கி வைத்தார்
- அபிஷேகப்பாக்கம் பகுதியில் புதிய ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடந்தது.
புதுச்சேரி:
மணவெளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அபிஷேகப்பாக்கம் பகுதியில் தற்போது நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை போக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.வும் சபாநாயகருமான ஏம்பலம் செல்வத்திடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுத்து பொதுப்பணித்துறை பொது சுகாதாரக் கோட்டம் மூலம் ரூ.14 லட்சம் மதிப்பில் புதிய ஆழ்துளை கிணறு அமைப்பதற்காக ஒப்புதல் பெற்று தந்தார்.
அதன்படி அபிஷேகப்பாக்கம் பகுதியில் புதிய ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடந்தது.
சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் உமாபதி, குடிநீர் திட்ட உதவி பொறியாளர் பீனாராணி, இளநிலை பொறியாளர் சிவானந்தம், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜ், இளநிலைப் பொறியாளர் அகிலன், மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் பா.ஜனத மாநில விவசாய அணி பொறுப்பாளர் ராமு, மாயகிருஷ்ணன் , ஜானகிராமன், மாறன், கிருஷ்ணமூர்த்தி ரெட்டியார், ரமேஷ், உமா, கதிரேசன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.