search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதிய போலீஸ் நிலையம்  ரங்கசாமி அடிக்கல் நாட்டினார்
    X

    லாஸ்ட்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட ரங்கசாமி அடிக்கல் நாட்டிய காட்சி.

    புதிய போலீஸ் நிலையம் ரங்கசாமி அடிக்கல் நாட்டினார்

    • லாஸ்ட்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு ரூ. 2 ½ கோடியில் புதிய கட்டிடம் கட்ட ரங்கசாமி அடிக்கல் நாட்டினார்
    • லாஸ்பேட்டை போலீஸ் நிலையம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை போலீஸ் நிலையம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதையடுத்து இந்த போலீஸ் நிலையத்துக்கு புதிய கட்டிடம் கிழக்கு கடற்கரைச்சாலையில் மடுவுபேட்டில் ரூ. 2 கோடியே 74 லட்சத்து 66 ஆயிரம் செலவில் கட்டப்படுகிறது.

    காலை நடந்த இதற்கான பூமி பூஜை விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் ரங்கசாமி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ. சரவணன் குமார், செல்வகணபதி, எம்.பி. வைத்தியநாதன் எம்.எல்.ஏ., காவல்துறை இயக்குநர் ரன்வீர் சிங் கிருஷ்ணியா, கூடுதல் காவல்துறை இயக்குநர் ஆனந்தமோகன், ஜ.ஜி சந்திரன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, உதவி பொறியாளர் ரவீந்திரன், இளநிலை பொறியாளர் ராஜூ உள்பட பலர் பங்கேற்றனர்.

    போலீஸ் நிலையம் 225 சதுர மீட்டர் அளவு தரைத்தளத்தில் முகப்பு வளாகமும், நிலைய அதிகாரி, எழுத்தர், தலைமைக்காவலர், பெண்கள் மற்றும் ஆண்கள் சிறை அறை ஆகியவையும் 218 சதுர மீட்டர் முதல் தளத்தில் ஆலோசனைக் கூடமும், கம்பியில்லா தொலைபேசி அறை, அலுவலக அறை, காவலர் அறை, ஆயுத அறை, இன்ஸ்பெக்டர் அறையும் அமையும்.

    2-வது தளத்தில் பதிவாளர் அறை, பொருள்கள் வைக்கும் அறை, குற்றப்பின்னணி கண்காணிப்பு அறை, பயிற்சி போலீசார் தங்கும் இடம் ஆகியவை அமைக்கப்படும். 8 மாதங்களில் இந்த போலீஸ் நிலையம் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    ஏற்கனவே கடந்த 2021-ல் இதே இடத்தில் அப்போதைய முதல்- அமைச்சர் நாராயணசாமி லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×