என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
முதியோர்- விதவை பென்ஷன்-அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அறிவிப்பு

- புதுவை அரசின் மகளிர் மற்றும் மேம்பாட்டுத்துறை சார்பில் முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டோருக்கு மாதந்தார உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
- விவசாயி களுக்கு வழங்கப்பட வேண்டிய மானியம், நிதியை தொடர்ந்து வழங்கி வருகிறோம்.
புதுச்சேரி:
புதுவை அரசின் மகளிர் மற்றும் மேம்பாட்டுத்துறை சார்பில் முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டோருக்கு மாதந்தார உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
புதிதாக முதியோர், விதவை உதவித்தொகை கேட்டு ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு உதவி த்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. இதற்கான கோப்பு முதல்-அமைச்சர் பரிந்து ரையுடன் கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த தகவலை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-
புதிதாக முதியோர், விதவை உதவித்தொகை விண்ணப்பித்துள்ள 16 ஆயிரத்து 769 பேருக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான அனுமதி இன்னும் ஓரிருநாளில் வெளியாகும். விவசாயி களுக்கு வழங்கப்பட வேண்டிய மானியம், நிதியை தொடர்ந்து வழங்கி வருகிறோம்.
2020-21-ல் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.13 கோடியே 21 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. இதில் விடுபட்டவர்களுக்கும் நிதி வழங்கப்பட்டு விட்டது. கறவை, காளை மாடுகள் வாங்க 800 கால்நடை வளர்ப்போருக்கு மானியம் வழங்கப்பட உள்ளது. இதில் பசுங்கன்றுக்கு ரூ.20 ஆயிரம், காளை கன்றுக்கு ரூ.15 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பங்கள் துறை மூலம் பெறப்பட்டுள்ளது. ஊசுடு ஏரியில் தனியார் சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் 2 கி.மீ. தூரத்துக்கு பூங்காவுடன் நடைபாதை அமைக்க உள்ளோம்.
இந்த பணி 6 மாதத்தில் முடிவடையும். இதன்பிறகு இயற்கை சூழலுடன் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளலாம். சேதராப்பட்டு கரசூரில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க அரசு நிலத்தை கையகப்படுத்தியிருந்தது.
இந்த நிலத்தில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டதாக புகார் எழுந்தது. வனத்துறை மூலம் நடவடிக்கை எடுத்தோம். 3 டன் மரமும், ஒரு டிராக்டரும் கையகப்படுத்தப்பட்டது. சாட்டிலைட் மூலம் மரம் வெட்டப்பட்டுள்ளதை கண்டறிய நடவடிக்கை எடுத்துள்ளோம். கருவேலமரங்கள்தான் வெட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.