என் மலர்
புதுச்சேரி
விநாயகா மிஷன் மருத்துவ கல்லூரி சார்பில் இலவச மருத்துவ முகாம்
- மருத்துவ துறை மற்றும் பேச்சு மற்றும் மொழி குறைபாடுகள் துறையினர் மருத்துவ சிகிச்சை அளித்தனர்.
- பல கிராமங்களில் வாரம் தோறும் பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு குறித்த இலவச முகாம் நடத்தப்பட உள்ளது.
புதுச்சேரி:
சேலம் விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை தலைவர் சந்திர சேகர் உத்தரவின் பேரில் காரைக்கால் விநாயகா மிஷன் மருத்துவ கல்லூரி மற்றும் பேச்சு மற்றும் மொழி குறைபாடுகள் துறை இணைந்து இலவச மருத்துவ முகாம் சங்கரன் பந்தல், அல் அமான் (கலை மகள்) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
முகாமிற்கு காரைக்கால் விநாயகா மிஷன் மருத்துவ கல்லூரி டீன் பேராசிரியர் குணசேகரன், பேச்சு மற்றும் மொழி குறைபாடுகள் துறை தலைவர் மற்றும் இணை பேராசிரியர் ரம்யா ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.
இதில் அனைத்து மருத்துவ துறை மற்றும் பேச்சு மற்றும் மொழி குறைபாடுகள் துறையினர் மருத்துவ சிகிச்சை அளித்தனர்.
இந்த முகாமில் சுமார் 300 பேர் பங்கேற்று சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் சந்திரசேகர் கூறியதாவது:-
இந்த கல்லூரியின் மருத்துவக் குழுக்களை கொண்டு பல கிராமங்களில் வாரம் தோறும் பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு குறித்த இலவச முகாம் நடத்தப்பட உள்ளது.
நோயாளிகள் புதிய தொழில் நுட்பத்துடன் பரிசோதனை செய்து சிகிச்சை பெற்று இது ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.