search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஓவிய போட்டி பரிசளிப்பு விழா
    X

    ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு நேரு எம்.எல்.ஏ., கோஜுரியோ கராத்தே சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் ஆகியோர் பரிசு வழங்கிய காட்சி.

    ஓவிய போட்டி பரிசளிப்பு விழா

    • உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட ராஜாநகர் பகுதியில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் மற்றும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
    • இதனைத்தொடர்ந்து நடைபெற்ற பள்ளி குழந்தைகளுக்கான ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

    புதுச்சேரி::

    உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட ராஜாநகர் பகுதியில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் மற்றும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மனித நேய மக்கள் சேவை நிறுவன தலைவரும், தொகுதி எம்.எல்.ஏ.வுமான நேரு கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். உருவபடத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    இதனைத்தொடர்ந்து நடைபெற்ற பள்ளி குழந்தைகளுக்கான ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மனித நேய மக்கள் சேவை இயக்க இளைஞரணி தலைவர் விநாயகம், கோஜுரியோ கராத்தே சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும் விழாவில் ஊர் பெரியவர்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×