search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஓடும் ரெயிலில் ஓவியப் போட்டி-சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்
    X

    ஓடும் ரெயிலில் ஓவியப் போட்டியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்த காட்சி.

    ஓடும் ரெயிலில் ஓவியப் போட்டி-சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்

    • உலக மகளிர் மாத விழிப்புணர்வு விழாவை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் பங்கேற்று ஓடும் ரெயிலில் ஓவியம் வரைந்தார்கள்.

    புதுச்சேரி:

    அரிச்சுவடி மனநல மையம் மற்றும் ரோட்டரிக் கிளப் ஆப் பாண்டிச்சேரி பிரஞ்சிட்டி சார்பில் உலக மகளிர் மாத விழிப்புணர்வு விழாவை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கொடி அசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.

    அரிச்சுவடி மனநல மைய இயக்குனர் டாக்டர் இளவழகன் சால்வை அணிவித்து வரவேற்றார். மேலும் சபாநாயகருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் பங்கேற்று ஓடும் ரெயிலில் ஓவியம் வரைந்தார்கள்.

    ரோட்டரிக் கிளப் ஆப் பாண்டிச்சேரி பிரஞ்சிட்டி தலைவர் சதிஷ்குமார் செயலாளர் சீனிவாசன், பொருளாளர் சரவணன் ரோட்டரிக் துணை கவர்னர் மதிவாணன், கோதை சதிஷ்குமார், அரசமாதேவி, ரவிச்சந்திரன் கேக்வெட்டி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கினார்கள்.

    மேலும் ஓவியப்போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் ரோட்டரிக் முன்னாள் தலைவர்கள் சாதிக், ராம்பிரகாஷ் மற்றும் ரோட்டரி உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், செந்தில், ஏழுமலை, பிரசாந்த், பாபு ராமசந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை ஆத்திச்சூடி சிறப்பு பள்ளி ஊழியர்கள் மற்றும் அரிச்சுவடி மனநல மைய ஊழியர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×