என் மலர்
புதுச்சேரி
உள்ளூர் அதிகாரிகள் பதவி உயர்வில் நடைமுறை சிக்கல்கள் தீர்க்கப்படும்-முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதி
- உள்ளூர் அதிகாரிகள் பயன் பெற முடியாமல் உள்ளது. பதவி உயர்வு கூட கிடைப்பதில்லை. உள்ளூர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு தருவதில்லை.
- யூ.பி.எஸ்.சி.யில் அடாக்கில் அதிகாரிகள் ஓராண்டுதான் இருக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம் வருமாறு:சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு:-
ஐ.ஏ.எஸ்.14, ஐ.பி.எஸ். 9, ஐ.எப்.எஸ். 3 பேர் இருந்தும் மக்கள் பணிகளை செய்யவில்லை. 1967 மக்கள் கணக்குப்படி பதவிகள் உள்ளன. உள்ளூர் அதிகாரிகள் பயன் பெற முடியாமல் உள்ளது. பதவி உயர்வு கூட கிடைப்பதில்லை. உள்ளூர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு தருவதில்லை.
சி.டி.சி. முறையில் ஊதிய உயர்வு சலுகைகள் இல்லை. கூடுதல் பொறுப்பில் 23 பி.சி.எஸ். அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்களால் முழுமையாக கவனம் செலுத்த இயலாது. துறைத்தலைவர்கள் இல்லை என்றால் ஊழியர்கள் ஒழுங்காக வேலை செய்ய இயலாது என்றார்
முதல்-அமைச்சர் ரங்கசாமி: தேவைப்பட்ட இடத்தில் அதிகாரிகள் நிரப்புவோம். சி.டி.சி. முறையில் பெரிய குறை உள்ளது. அடாக் மூலம் தர தொடங்கிய. உள்ளோம். யூ.பி.எஸ்.சி.யில் அடாக்கில் அதிகாரிகள் ஓராண்டுதான் இருக்க வேண்டும் என கூறியுள்ளனர். ரெகுலைஸ் பண்ணாததால் இத்தகைய பிரச்சினை உள்ளது. கே.எஸ்.பி. ரமேஷ்- தலைமைச்செயலர் என்ன முடிவு எடுக்க போகிறார்.?
முதல்-அமைச்சர் ரங்கசாமி: உடன் செய்ய முடியாது. சில மாற்றங்கள் செய்ய வேண்டும். கடந்த ஆட்சியில் தலைமைச் செயலர் காட்டிய வழியால் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதே எண்ணத்தில் தற்போதுள்ள தலைமை செய்லாளரும் உள்ளார்.
சட்டப்படி அவர் செய்துள்ளார். பல சங்கடங்கள் இருக்கிறது. அதை வெளிப்படுத்த முடியாது. நடந்து கொண்டுள்ள பேரவையில் எம்.எல்.ஏ.க்கள் தெளிவாக கருத்து சொல்லி உள்ளனர். குறைபாடுகள் நிறைய சொல்லி உள்ளனர். நிர்வாகத்தில் உள்ளது உண்மைதான். இதில் கவனம் செலுத்தி நடைமுறை சிக்கல்கள் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.