என் மலர்
புதுச்சேரி
ரேஷன்கடைகளை திறக்க கோரி ஊர்வலம் - ஆர்ப்பாட்டம்
- காய்கறி மாலையுடன் திரண்டனர்
- அனைத்து குடும்ப தலைவி களுக்கும் ரூ.ஆயிரம் உரிமைத்தொகை வழங்க வேண்டும்.
புதுச்சேரி:
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்த நேருவீதி-மிஷன்வீதி சந்திப்பிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.
ஊர்வலத்துக்கு மாதர்சங்க மாநில தலைவி முனியம்மாள் தலைமை தாங்கினார். துணை செயலாளர் உமாசாந்தி, மாநிலக்குழு உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் இளவரசி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
ஊர்வலத்தில் மாநிலக்குழு உறுப்பினர்கள் தாட்சாயிணி, பரிமளா, பிரியா, ஜானகி, சிவசங்கரி, கோமதி, மாலதி, சந்திர வதனி, மலர்விழி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஊர்வலம் மிஷன்வீதி வழியாக கவர்னர் மாளிகை நோக்கி வந்தது. செயின்ட் தாழ் வீதியில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
ஊர்வலத்தில் வந்தவர்கள் பால் பாக்கெட், காய்கறி, மளிகை பொருட்களை நூலில் கட்டி தூக்கி வந்தனர். ரேஷன்கடைகளை திறந்து அரிசி, அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் மீதான விலைவாசி உயர்வை தடுக்க வேண்டும்.
ரெஸ்டோபார்களை இழுத்து மூட வேண்டும். அனைத்து குடும்ப தலைவி களுக்கும் ரூ.ஆயிரம் உரிமைத்தொகை வழங்க வேண்டும்.
மகளிருக்கு இலவச பஸ் இயக்க வேண்டும். வேலை உறுதி திட்டத்தை 100 நாட்கள் முழுமையாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தில் கோரிக்கை களை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
பின்னர் அவர்கள் களைந்து சென்றனர்.