search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கைப்பந்து பயிற்சியாளரை கைது செய்ய கோரி போராட்டம்
    X

    பாகூர் போலீஸ் நிலையம் முன்பு இந்திய தேசிய மாதர் சங்கத்தினர் போராட்டம் நடத்திய காட்சி.

    கைப்பந்து பயிற்சியாளரை கைது செய்ய கோரி போராட்டம்

    • புதுவையில் உள்ள சாய் விளையாட்டு கழகத்தில் கைப்பந்து பயிற்சியாளராக இருந்து வருகிறார்.
    • இவரிடம் புதுவை பகுதியில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் கைப்பந்து பயிற்சி பெற்று வருகின்றனர்.

    புதுச்சேரி:

    பாகூர் பழைய காமராஜ் நகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 57). இவர் புதுவையில் உள்ள சாய் விளையாட்டு கழகத்தில் கைப்பந்து பயிற்சியாளராக இருந்து வருகிறார்.

    இவரிடம் புதுவை பகுதியில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் கைப்பந்து பயிற்சி பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் புதுவை கிராம பகுதியில் இருந்து வந்த மாணவிக்கு செல்போன் மூலம் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பந்தப்பட்ட கிராம பகுதியைச் சேர்ந்த மாணவியின் பெற்றோர் பாகூர் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தனர்.

    பள்ளி மாணவி பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பாகூர் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் நந்தகுமார் போக்சோ வழக்கு பதிவு செய்து மேலும் பள்ளி மாணவிக்கு குறுந்தகவல் அனுப்பி பாலியல் தொல்லையில் ஈடுபட்ட கைப்பந்து பயிற்சியாளர் சண்முகத்தை வலை வீசி தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் புகார் அளித்து 4 நாட்கள் ஆகியும் குற்றவாளியை கைது செய்யாததை கண்டித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் இன்று பாகூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று முறையிட்டனர். பின்னர் குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி போலீஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்தப் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாக குழு உறுப்பினர் அமுதா, இந்திய மாதர் தேசிய சம்மேளன தலைவர் தசரதா, துணைச் செயலாளர் சரோஜா, பாகூர் மக்கள் நல இயக்க பொன்னம்மாள் உள்ளிட்ட பலர் ஈடுபட்டனர்.

    இதைபோல் நேற்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் பாகூர் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்சியாளரை கைது செய்யவேண்டும் என வலியுறுத்தினர்.

    இதில் மாநில செயலாளர் இளவரசி, பாகூர் கொம்யூன் தலைவர் பரிமளா, செயலாளர் வதனி, பொருளாளர் வளர்மதி மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் பாகூர் கொம்யூன் செயலாளர் சரவணன், மாநில குழு உறுப்பினர் கலியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×