என் மலர்
புதுச்சேரி
பொதுப்பணித்துறை ஊழியர்கள் சட்டசபை நோக்கி ஊர்வலம்
- போலீசாருடன் தள்ளு முள்ளு-பரபரப்பு
- ஊழியர்கள் மிஷன் வீதி, லப்போர்த் வீதி வழியாக ஆம்பூர் சாலைக்கு ஊர்வலமாக வந்தனர்.
புதுச்சேரி:
புதுவை பொதுப்பணித் துறையில் 2015-ம் ஆண்டு நூற்றுக்கணக்கான ஊழி–யர்கள் பணியில் அமர்த்தப் பட்டனர்.
2016-ம் ஆண்டு சட்ட–மன்ற தேர்தல் அறிவிக்கப் பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிகளின்கீழ் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். தேர்தலுக்கு பின் தங்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
ஆனால் அரசு அவர் களை பணியில் அமர்த்த–வில்லை. இந்த நிலையில் பொதுப்பணித்துறையில் பணி–நீக்கம் செய்யப்பட்ட ஊழி–யர்கள் போராட்டக் குழுவை உருவாக்கி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே கடந்த மார்ச் மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
ஆனால் 6 மாதங்களை கடந்தும் இன்னும் வேலை வழங்கவில்லை. இதை–யடுத்து தங்களுக்கு வேலை வழங்கக்கோரி சட்ட–சபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்த–னர். இதற்காக ஆம்பூர் சாலை செயின்ட்பால் வீதியில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் தெய்வீகன் தலைமையில் இன்று திரண்டனர்.
ஒருங்கிணைப்பாளர் கள் வினோத், சத்தியவதி, மணி–வண்ணன், புண்ணியகோடி, புகழேந்தி, ஆனந்தபாபு, பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவர்களை சட்டசபை நோக்கி செல்ல விடாமல் போலீசார் பேரிகார்டுகளை அமைத்து தடுத்து நிறுத்தி னர். இதனால் ஊழியர்கள் மிஷன் வீதி, லப்போர்த் வீதி வழியாக ஆம்பூர் சாலைக்கு ஊர்வலமாக வந்தனர்.
அவர்களை போலீசார் மீண்டும் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து போலீசாரு டன் அவர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் செயிண்ட் தாழ் வீதி - ஆம்பூர் சாலை சந்திப்புக்கு அனுப்பி வைத்தனர். அங்கு போராட்டக் காரர்கள் பேரிகார்டுகளை தள்ளி முன்னேறிச் செல்ல முயன்ற னர்.
இதனால் ஒருபுறம் போலீசாரும், மறுபுறும் போராட்டக்குழுவினரும் பேரிகார்டுகளை தள்ளிய தால் பரபரப்பு, பதட்டம், வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து போராட்டக்குழுவினர் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் முதல்-அமைச் சரை சந்திக்க அவர்கள் காத்திருந்தனர்.