என் மலர்
புதுச்சேரி
கருப்பு நிற அழகி போட்டிக்கு புதுச்சேரி மாடலிங் பெண் தேர்வு: முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்
- ஆப்பிரிக்கா நாட்டில் வருகிற 25-ந்தேதி முதல் அடுத்த மாதம் டிசம்பர் 4-ந் தேதி வரை மிஸ் ஆப்பிரிக்கா கோல்டன் போட்டி நடைபெற உள்ளது.
- போட்டியில் கலந்துகொள்ள சான் ரேச்சல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி காராமணிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் காந்தி தேவராஜ். இவரது மகள் சான்ரேச்சல் (வயது 23). இவர் சிறு வயதில் இருந்தே மாடலிங் துறையில் பல்வேறு சாதனைகள் படைத்து வருகிறார்.
மிஸ் புதுச்சேரி-2020, மிஸ் பெஸ்ட் ஆட் டிட்யூட்-2019, மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு-2019, குயின் ஆப் மெட்ராஸ்-2022 ஆகிய விருதுகளை பெற்றுள்ளார். சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற மிஸ் ஆப்பிரிக்கா கோல்டன் இந்தியா-2023 அழகி போட்டியில் கலந்து கொண்டு விருது பெற்றுள்ளார்.
இந்த நிலையில் ஆப்பிரிக்கா நாட்டில் வருகிற 25-ந்தேதி முதல் அடுத்த மாதம் டிசம்பர் 4-ந் தேதி வரை மிஸ் ஆப்பிரிக்கா கோல்டன் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கலந்துகொள்ள சான் ரேச்சல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவர் சட்டசபை வளாகத்தில் முதலமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து
பெற்றார். மேலும் இப்போட்டியில் பங்கேற்க நிதியுதவி வழங்குமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு முதலமைச்சர் ரங்கசாமி நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
அப்போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உடனிருந்தார்.