search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை சென்டாக் அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும்
    X

    கோப்பு படம்.

    புதுவை சென்டாக் அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும்

    • வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தல்
    • இந்திய மருத்துவ மையத்திடம் கால அவகாசம் கோராமல் தன்னிச்சையாக அறிவிப்பை வெளியிட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலா ளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    சென்டாக் மருத்துவ மாணவர் சேர்க்கையில் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது.

    சென்டாக் அதிகாரிகளின் சுயநல போக்காலும், ஆட்சி யாளர்களின் அலட்சியத்தா லும் ஏழை, எளிய மாணவர்க ளின் மருத்துவ கல்லூரி கனவுகள் சிதைக்கப்பட்டு வருகிறது.

    கடந்த 5-ந் தேதி மருத்துவம் படிக்க 2 கட்ட கலந்தாய்வுக்காக தேர்வு செய்யப்பட்ட மாணவர்க ளின் பட்டியலை சென்டாக் நிர்வாகம் வெளியிட்டது.

    முதல்கட்ட கலந்தாய்வில் காலியாக உள்ள 34 இடங்க ளுக்கு பதிலாக 74 காலியி டங்கள் உள்ளதாக சென்டாக் நிர்வாகம் வெளி யிட்டு மாணவர்களிடையே திட்டமிட்டே குழப்பத்தை ஏற்படுத்தியது.

    செப்டம்பர் 30-ந் தேதியுடன் மருத்துவ கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என இந்திய மருத்துவ மையம் உத்தர விட்டுள்ளது.

    இந்த உத்தரவை புதுவை சென்டாக் நிர்வாகம் பின்பற்றாமல், இந்திய மருத்துவ மையத்திடம் கால அவகாசம் கோராமல் தன்னிச்சையாக அறிவிப்பை வெளியிட்டது.

    இதையடுத்து அவசரகதி யில் 2-ம் கட்ட கலந்தாய்வு அறிவிப்பை சென்டாக் நிர்வாகம் வாபஸ் பெற்றுள்ளது.

    சென்டாக் நிர்வாகத்தின் இந்த சதிச்செயலை புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் வன்மையாக கண்டிக்கி றோம்.

    இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும். ஒட்டு மொத்த குளறுபடிகளுக்கும் சென்டாக்கில் நீண்ட காலமாக பணியாற்றும் அதிகாரிகள்தான் காரணம். எனவே சென்டாக்கில் பணிபுரியும் ஒட்டுமொத்த அதிகாரிகளையும் பதவிநீக்கம் செய்துவிட்டு, புதியதாக அதிகாரிகளை நியமனம் செய்து கலந் தாய்வை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×