என் மலர்
புதுச்சேரி
X
சர்வதேச பளுதூக்கு போட்டியில் 2-ம் இடம் பிடித்து சாதனை
ByPDYSathya16 May 2023 12:16 PM IST (Updated: 17 May 2023 1:57 PM IST)
- கல்லூரி மாணவர் அன்பரசன் சர்வதேச பளுதூக்கு போட்டியில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
- பொதுச் செயலாளர் சிட்டிபாபு தலைமையில் அன்பரசனை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
புதுச்சேரி:
தமிழ்நாடு மீனவர் பேரவையின் நிறுவனத் தலைவர் அன்பழகனார் ஆணைப்படி, புதுவை மாநிலம் வைத்திக்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அன்பரசன் சர்வதேச பளுதூக்கு போட்டியில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
தமிழ்நாடு மீனவர் பேரவை புதுவை மாநில நிர்வாகிகள் நேரில் சென்று மாநில பொதுச் செயலாளர் சிட்டிபாபு தலைமையில் அன்பரசனை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
புதுவை மாநில தலைவர் புகழேந்தி மாணவனுக்கு தேவையான உபகரணங்கள், அரசு உதவிப் பெற்று தருவதாக உறுதியளித்தார்.
அப்போது ஆலோசகர் புத்துப்பட்டார், துணைத்தலைவர் ஜெயவேலு, பொதுச் செயலாளர் குணசீலன், செயலாளர் சுகுமார், சரவணன் உடனிருந்தனர்.
Next Story
×
X