search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    குளத்தை தூய்மை செய்தமுத்து ரத்தின அரங்கம் பள்ளி மாணவர்கள்
    X

    குளம் தூய்மை செய்யும் பணியை வில்லியனூர் கொம்யூன் ஆணையர் ஆறுமுகம் தொடங்கி வைத்த காட்சி. அருகில் கராத்தே சுந்தர்ராஜன் உள்ளார்.

    குளத்தை தூய்மை செய்தமுத்து ரத்தின அரங்கம் பள்ளி மாணவர்கள்

    • குளம், ஏரி, இயற்கைச் சார்ந்த பகுதிக ளில் தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • இந்த தூய்மைப் படுத்தும் நிகழ்ச்சி அங்கு சுற்றியுள்ள ஊர் பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    புதுவை கவுண்டன் பாளையம் முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப் பணித் திட்டத்தின் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் குளம்,

    ஏரி, இயற்கைச் சார்ந்த பகுதிக ளில் தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதில் 8-ம் வாரமாக வில்லியனூரில் அமைந்துள்ள அன்னம் மாள் சரித்திர குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி யில் தூய்மைப் படுத்தும் நிகழ்வு நடை பெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு பள்ளி யின் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினராக வில்லியனூர் கொம்யூன் ஆணையர் ஆறுமுகம் கலந்து கொண்டு தூய்மைப் படுத்தும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்

    இதில் 1½ டன் அளவிற்கு பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி கழிவுகள் அகற்றப் பட்டன. இதில் 50 நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

    புதுச்சேரி மாநில கோஜிரியோ கராத்தே சங்கத்தின் பொதுச் செயலாளர் கராத்தே சுந்தர் ராஜன் வழிநடத்தினார். மண்வாசம் இளைஞர் நற்பணி மன்றம் திருக்காஞ்சி குழுவினர் மற்றும் சமூக சேவகர் யுனஸ்கோ குளங்கள் காப்போம் குழுவின் தலைவர் கார்த்தி கேயன் ஆகியோர் கலந்து கொண்டு தூய்மைப்ப டுத்தும் மாணவர்களை ஊக்கப் படுத்தினர். இந்த தூய்மைப் படுத்தும் நிகழ்ச்சி அங்கு சுற்றியுள்ள ஊர் பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    பள்ளியின் ஆசிரியர் நெடுஞ்செழியன் , சோமு உடன் இருந்தனர்.

    நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி யின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெயந்தி செய்திருந்தார்.

    Next Story
    ×