search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ரூ.3.56 கோடியில் ஆய்வகம்-ரங்கசாமி திறந்து வைத்தார்
    X

    கோப்பு படம்.

    ரூ.3.56 கோடியில் ஆய்வகம்-ரங்கசாமி திறந்து வைத்தார்

    • புதுவை அரசு இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் ரூ.3.56 கோடி செலவில் நவீனமுறை மரபணு பகுப்பாய்வு ஆய்வகம் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்து அமைக்கப்பட்டுள்ளது.
    • இந்த நவீன ஆய்வகத்தில் வைரஸ் வகைகளைக் கண்டறியும் அதிநவீன வசதிகள் உள்ளன.

    புதுச்சேரி:

    புதுவை அரசு இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் ரூ.3.56 கோடி செலவில் நவீனமுறை மரபணு பகுப்பாய்வு ஆய்வகம் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்து அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வகத்தை கதிர்காமம் தொகுதி எம்.எல்.ஏ. கே.எஸ்.பி.ரமேஷ் முன்னிலையில், முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை அரசு செயலர் உதய குமார், இயக்குநர் ஸ்ரீராமுலு, மருத்துவ கல்லூரி இயக்குநர் உதயசங்கர், மக்கள் தொடர்பு அதிகாரி ராஜேஷ், நுண்ணுயிரியல் துறைத் தலைவர் நந்திதா பனாஜி, நோடல் அதிகாரி சீனிவாசன், நிர்வாக அதிகாரி முத்துலிங்கம் மற்றும் பிற முக்கிய உறுப்பினர்கள், ஆராய்ச்சி விஞ்ஞானிகள் மற்றும் பிற துணைப் பணியாளர்கள் பங்குபெற்றனர்.

    இந்த நவீன ஆய்வகத்தில் வைரஸ் வகைகளைக் கண்டறியும் அதிநவீன வசதிகள் உள்ளன. ஓமிக்ரான் போன்ற உருமாறிய கொரோனா கிருமியை சரியாக கண்டறிய முடியும்.

    எந்த உருவம் எந்தவொரு கிருமி மாறினாலும் அதனை இந்த ஆய்வகம் மூலம் கண்டறிந்து விடலாம். மரபணு பகுப்பாய்விற்கு பிற மாநிலங்களுக்கு மாதிரிகளை அனுப்ப வேண்டிய தேவை தவிர்க்கப்படும்.

    இந்த ஆய்வகம் ஒரு இணைப்பு மையமாக செயல்பட்டு புதுவை, சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு சேவை செய்யும். இந்த நவீன ஆய்வகம் கொரோனாவுக்கு மட்டுமின்றி, வரும் காலங்களில் எந்த கிருமிகள் மூலம் தொற்று ஏற்பட்டாலும், இதர பல கிருமிகளை பற்றியும் தெரிந்து கொள்ள அமைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×