search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ரங்கசாமி தேசியக் கொடி வழங்கினார்
    X

    என்.ஆர்.காங்கிரஸ் அலுவலகத்தில் தேசிய கொடியை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கிய போது எடுத்தபடம்.

    ரங்கசாமி தேசியக் கொடி வழங்கினார்

    • வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்றுவதற்காக என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது.
    • நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு தேசிய தலைவர்களின் படங்களுக்கு மரியாதை செலுத்தி தேசியக்கொடிகளை வழங்கினார்.

    புதுச்சேரி:

    நாட்டின் 75-வது சுதந்திர தினநாளையொட்டி வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்றுவதற்காக என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது.

    நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு தேசிய தலைவர்களின் படங்களுக்கு மரியாதை செலுத்தி தேசியக்கொடிகளை வழங்கினார்.

    இதில் அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திர பிரியங்கா , துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிகாந்தன், பாஸ்கர், நேரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×