என் மலர்
புதுச்சேரி
X
சாலை அமைக்கும் பணி-சம்பத் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
Byமாலை மலர்4 Jan 2023 2:28 PM IST
- முதலியார்பேட்டை தொகுதி குமரன் நகர் பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்து மோசமான நிலையில் இருந்தது.
- இதை தொடர்ந்து சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை சம்பத் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
புதுச்சேரி:
முதலியார்பேட்டை தொகுதி குமரன் நகர் பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்து மோசமான நிலையில் இருந்தது. இதனால் பொதுமக்களின் போக்குவரத்திற்கு கடும் சிரமம் ஏற்பட்டது. இந்த சாலைகளை சீரமைத்து தருமாறு குமரன் நகர் பகுதி மக்கள் சம்பத் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து தனது சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் ஒதுக்கி பணிகளை மேற்கொள்ள புதுவை நகராட்சி அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை சம்பத் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
இதில், நகராட்சி ஆணையர் சிவகுமார், செயற்பொறியாளர் சிவபாலன், உதவிப் பொறியாளர் வெங்க டாஜலபதி, இளநிலை பொறியாளர் ரமேஷ், குமரன் நகர் நல வாழ்வு சங்க நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
X