என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
புதுச்சேரி
![ரூ.13 லட்சம் செலவில் மேற்கூரை ரூ.13 லட்சம் செலவில் மேற்கூரை](https://media.maalaimalar.com/h-upload/2023/07/14/1915215-img202307141007351407202393a9blgcmy.webp)
முத்தியால்பேட்டை அரசு பெண்கள் நடுநிலைப்பள்ளியில் மேற்கூரை அமைப்பதற்கான பூமி பூஜையினை ராஜ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
ரூ.13 லட்சம் செலவில் மேற்கூரை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியில் மேற்கூரை சேதமடைந்து காணப்பட்டது.
புதுச்சேரி:
முத்தியால்பேட்டை தொகுதி முத்தையா முதலியார் வீதியில் உள்ள அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியில் மேற்கூரை சேதமடைந்து காணப்பட்டது.
இதுகுறித்து பள்ளியின் ஆசிரியர்கள் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏவிடம் கோரிக்கை வைத்து புதியதாக மேற்கூரை அமைக்கும்படி கேட்டுக் கொண்டனர். பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ வின் முயற்சியால் மேற்கூரை அமைக்க திட்டம் வகுக்கப்பட்டது.
ரூ.13.78 லட்சம் மதிப்பீட்டில் நடக்கவுள்ள இப்பணியை பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ. இன்று பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி, கல்வித்துறை துணை இயக்குனர் (பெண் கல்வி) சிவராம ரெட்டி, பொதுப்பணித்துறை சிறப்பு கட்டிடப் பிரிவு செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், உதவி பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் ஆனந்தன், ஆசிரியர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.