என் மலர்
புதுச்சேரி
ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகளுடன் சம்பத் எம்.எல்.ஏ. ஆலோசனை
- ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகிறது.
- இவற்றில் சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படாமலும் பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி:
முதலியார் பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகிறது.
இவற்றில் சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படாமலும் பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது.
அதற்கான காரணங்களை அறிந்து களைவதற்காக ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது.
சம்பத் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தலைமை பொறியாளர்கள் ரவிச்சந்திரன், புகழேந்தி, மற்றும் மேலாண் இயக்குனர் திருஞானம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பணிகள் தொடங்குவதில் உள்ள காரணங்களை எம்.எல்.ஏ.விடம் அதிகாரிகள் தரப்பில் விளக்கம் தெரிவித்தனர். அவற்றை எப்படி கையாள்வது என்பது குறித்து ஆலோசனைகளை சம்பத் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
இதனால் தாமதப்பட்டிருந்த மரப்பாலம் சந்திப்பில் தொடங்க உள்ள டோபிகானா உள்ளிட்ட பணிகள் அடுத்த வாரங்களில் தொடங்கி விடுவதாக அதிகாரிகள் தரப்பில் உறுதியாக கூறப்பட்டது.