என் மலர்
புதுச்சேரி
புதுவை பா. ஜனதா தலைவராக செல்வகணபதி எம்.பி. பதவி ஏற்பு
- கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்பு
- கடந்த 8 ஆண்டுகளாக என்னுடன் கட்சிப் பணி செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலம் பாரதீய ஜனதா கட்சியின் புதிய தலைவர் பொறுப்பு ஏற்கும் விழா கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது.
புதுவை மாநிலம் பாரதீய ஜனதா கட்சிக்கு புதிய தலைவராக செல்வகணபதி எம்.பி. பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவால் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் செல்வ–கணபதி எம்.பி. பா.ஜனதா மாநில தலைவராக பொறுப்பேற்கும் விழா நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.
முன்னதாக லாஸ்பேட்டை ஈ.சி.ஆர். சாலையில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் இருந்து திறந்த வாகனத்தில் செல்வ கணபதி எம்.பி.யை கட்சி யினர் ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
இந்த ஊர்வலம் சிவாஜி சிலை சின்னமணி கூண்டு, அஜந்தா சிக்னல், ராஜா தியேட்டர் சிக்னல், அண்ணா சிலை வழியாக இந்திரா காந்தி சதுக்கம் எல்லைப் பிள்ளை சாவடி வழியாகச் சென்று பா.ஜனதா தலைமை அலுவலகம் வந்தடைந்தது.
பா.ஜனதா கட்சியின் மாநில தலைவராக இருந்த சாமிநாதன், பா.ஜனதா மாநில பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா ஆகியோர் புதிய தலைவருக்கு பா.ஜனதா கட்சியின் கொடியை வழங்கி 'பாரத் மாதா கி ஜெய்' என்ற கோஷத்துடன் வாழ்த்துக் களை தெரிவித்தனர்.
பின்னர் செல்வகணபதி எம்.பி.யை தலைமை அலுவலகத்தில் உள்ள தலைவரின் இருக்கையில் அமரவைத்தனர்.
நிகழ்ச்சியில் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய். ஜெ.சரவணன்குமார் எம்.எல்.ஏ.க்கள் கல்யாண சுந்தரம், ஜான்குமார், ராம–லிங்கம், ரிச்சர்ட்ஜான்குமார், வெங்கடேசன், சிவசங்கர், அசோக்பாபு, பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் மோகன்குமார் முன்னிலை–யில் பதவியேற்பு விழா நிகழ்ச்சி நடந்தது.
முன்னாள் தலைவர் சுவாமிநாதன் புதிய தலைவர் செல்வகணபதி எம்.பி.யை வாழ்த்தி பேசினார். அதில், கடந்த 8 ஆண்டுகளாக என்னுடன் கட்சிப் பணி செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், புதிதாக தலைவ ராக பொறுப்பேற்றுள்ள செல்வகணபதி எம்.பி.க்கு நிர்வாகிகள் அனைவரும் ஒத்துழைப்பு அளித்து கட்சி பணி செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட பா.ஜனதா மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி பேசுகையில், புதிய மாநில தலைவர் பொறுப் பேற்கும் விழாவில் வருகை தந்து வாழ்த்தியமைக்கு அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கட்சி பணியை அனைவரும் சிறப்பாக தொடர்ந்து செய்திட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் புதுவை மாநில, மாவட்ட, தொகுதி பா.ஜனதா நிர்வாகிகள் பல்வேறு அணிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.