என் மலர்
புதுச்சேரி
மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் கருத்தரங்கம்
- இந்தியாவின் நிலையான வளர்ச்சிக்கான தொழில்நுட்பம் என்ற கருப்பொருளில் தென் பிராந்திய மாணவர்களுக்கான கருத்தரங்கம் ஒன்றை நடத்தின.
- கல்வி, தொழில்துறை, தொழில்நுட்ப பயன்பாடு, பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
புதுச்சேரி:
மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் இன்ஸ்டியூசன் ஆப் என்ஜினீயர்ஸ் அமைப்பின் புதுவை பிரிவும் இணைந்து கிராமப்புற இந்தியாவின் நிலையான வளர்ச்சிக்கான தொழில்நுட்பம் என்ற கருப்பொருளில் தென் பிராந்திய மாணவர்களுக்கான கருத்தரங்கம் ஒன்றை நடத்தின.
கருத்தரங்கிற்கு தக்ஷசீலா பல்கலைக்கழகத்தின் வேந்தர் மற்றும் ஸ்ரீமணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். அமைச்சர் லட்சுமிநாராயணன்
தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பேசும்போது, புதுவை மாநிலம் 95 சதவீதம் உயர்கல்வி படிக்கும் மாநிலமாகவும், விவசாயம், கல்வி, தொழில்துறை, தொழில்நுட்ப பயன்பாடு, பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் சி.ஐ.ஐ. பிரிவின் தலைவர் ஜோசப் ரொசாரியோ, மணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளை துணைத்தலைவர் சுகுமாரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இன்ஸ்டியூசன் ஆப் என்ஜினீயர்ஸ் தெலுங்கானா தலைவர் பிரம்மரெட்டி, புதுவை பல்கலைக்கழக பேராசிரியர்கள் நக்கீரன், லோகநாதன், புதுவை மின்துறை நிர்வாக பொறியாளர் சண்முகவடிவேல், கல்லூரியின் பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், டீன்கள் அன்புமலர், அறிவழகர், வேல்முருகன், முத்துலட்சுமி, மனோகரன், கோபால், முகமது யாசின், சந்திரசேகர், சிதம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.