என் மலர்
புதுச்சேரி
வீடு வீடாக தேசிய கொடி வழங்கிய சபாநாயகர்
- புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மணவெளி சட்டமன்றத் தொகுதியில் தனது ஏற்பாட்டின் பேரில் அனைத்து வீடுகளுக்கும் தேசிய கொடியை வழங்கினார்.
- புதுக்குப்பம் கிராம பஞ்சாயத்தார் மணவெளி பகுதி கலைவாணன், தங்கதுரை மற்றும் இளைஞர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திர ஆண்டு அமுதப் பெருவிழா நிறைவை முன்னிட்டும் 76 -ம் ஆண்டு சுதந்திர தினத்தை போற்றும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை போற்றும் வகையிலும் சுதந்திர திருநாளை அனைவரும் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொ ண்டுள்ளார்.
மேலும் இல்லம் தோறும் தேசியக்கொடி ஏற்றும் இயக்கத்தை தொடங்கி வைத்து அனைவர் இல்லங்களிலும் இன்று முதல் 15-ந் தேதி வரை தேசிய கொடியை பறக்க விட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மணவெளி சட்டமன்றத் தொகுதியில் தனது ஏற்பாட்டின் பேரில் அனைத்து வீடுகளுக்கும் தேசிய கொடியை வழங்கினார்.
புதுக்குப்பம் பகுதியில் தேசிய கொடியை ஏற்றி வைத்து அனைத்து வீடுகளுக்கும் தேசியக் கொடியை வழங்கி அவரே தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மணவெளி பகுதியில் தேசியக் கொடியை ஏற்றி வீடுகளுக்கு தேசிய கொடி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகளில் பா.ஜனதா தொகுதி தலைவர் லட்சுமி காந்தன் கூட்டுறவு கடன் வழங்கும் சங்க தலைவர் தட்சிணா மூர்த்தி, புதுக்குப்பம் கிராம பஞ்சாயத்தார் மணவெளி பகுதி கலைவாணன், தங்கதுரை மற்றும் இளைஞர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.