search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பஞ்சவடி கோவிலில் ஆஞ்சநேயருக்கு விசேஷ பூஜை
    X

    பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் பழங்களால் அலங்கரிக்கப்பட்டு ஆஞ்சநேயர் மக்களுக்கு அருள் பாலித்த காட்சி.

    பஞ்சவடி கோவிலில் ஆஞ்சநேயருக்கு விசேஷ பூஜை

    • திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அடுத்த பஞ்சவடியில் ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்ட் கீழ் இயங்கும் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்உள்ளது.
    • 2023 புத்தாண்டையொட்டி 2023 கிலோவில் பூந்தி தயாரிக்கப்பட்டு லட்டு பிரசாதமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அடுத்த பஞ்சவடியில் ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்ட் கீழ் இயங்கும் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்உள்ளது.

    புத்தாண்டையொட்டி பொதுமக்கள் சிறப்பு தரிசனம் செய்ய கோவில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    3 மணிக்கு கோ பூஜை நடந்தது. அதனைத் தொடர்ந்து அனைத்து சன்னதிகளும் விஸ்வரூபம் கண்டருளியப்பட்டது. தொடர்ந்து ராமர் பாதுகைக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட விசேஷ திரவியங்களால் திருமஞ்சனம் நடந்தது.

    10 மணிக்கு பாலாம்பாளின் வயலின் கச்சேரி நடந்தது. சென்னையைச் சேர்ந்த ஒரு பக்தரின் வேண்டுகோளுக்கு இணங்க பஞ்சமுக ஆஞ்சநேயர் பழங்களால் அலங்கரிக்கப்பட்டு விசேஷ அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    2023 புத்தாண்டையொட்டி 2023 கிலோவில் பூந்தி தயாரிக்கப்பட்டு லட்டு பிரசாதமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. வைகுண்ட ஏகாதேசியையொட்டி சீனிவாச பெருமாளுக்கு விசேஷ மோகினி அலங்காரம் செய்யப்பட்டு 6 மணிக்கு பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.

    நாளை காலை 5 மணிக்கு ஸ்ரீனிவாச பெருமாளின் துணைவியார் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் பரமபத வாசல் வழியாக ஆச்சாரியன் ஆழ்வார்க ளுக்கு அருள் பாலிக்கிறார். அதனைத் தொடர்ந்து புஷ்ப பந்தல் வழியாக ஏற்பாடு செய்யப்பட்ட விசேஷ மண்டபத்தில் ஸ்ரீனிவாச பெருமாள் அருள் பாலிக்கிறார்.

    இந்நிகழ்ச்சியினை பஞ்சமுக ஸ்ரீ ஜெய மாருதி சேவா டிரஸ்ட் தலைவர் கோதண்டராமன் தலைமையில் அறங்காவலர்கள் நரசிம்மன், டாக்டர் பழனியப்பன், செல்வம், நடராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

    புத்தாண்டையொட்டி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு பொதுமக்கள் உடல் பரிசோதனை செய்தனர்.

    Next Story
    ×