என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
புதுச்சேரி
![மணக்குள விநாயகர் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம் மணக்குள விநாயகர் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம்](https://media.maalaimalar.com/h-upload/2022/10/03/1771182-img-20220930-wa0013.jpg)
சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்ற காட்சி.
மணக்குள விநாயகர் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- புதுவை மதகடிப்பட்டில் உள்ள மணக்குள விநாயகர் என்ஜினீயர் கல்லூரியில் கற்றலை மேம்படுத்துவது குறித்து சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
- மணக்குள விநாயகர் என்ஜினீயர் கல்லூரி பதிவாளர் அப்பாஸ் மொய்தீன் வரவேற்புரையாற்றினார்.
புதுச்சேரி:
புதுவை மதகடிப்பட்டில் உள்ள மணக்குள விநாயகர் என்ஜினீயர் கல்லூரியில் கற்றலை மேம்படுத்துவது குறித்து சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் நிரலாக்கத்தின் விளைவு அடிப்படையிலான கற்பித்தல், கட்டமைப்பு, எம்பெடட் பாடங்கள் மற்றும் ப்ளும்ஸ் டாக்ஸ்னாமி அடிப்படையில் வினா தாள்களை உருவாக்குதல் ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
மணக்குள விநாயகர் என்ஜினீயர் கல்லூரி பதிவாளர் அப்பாஸ் மொய்தீன் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினி துறை பேராசிரியர் பாஸ்கரன் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல் ஆலோசனைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மணக்குள விநாயகர் கல்வி குழுத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வருமான வெங்கடாசலபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.