என் மலர்
புதுச்சேரி
புனித பேட்ரிக் பள்ளியில் விளையாட்டு விழா
- புனித பேட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 32-ம் ஆண்டு விளையாட்டு விழா பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
- பள்ளியில் இருந்து விளையாட்டு மைதானத்திற்கு மாணவர்கள் ஜோதியினை கொண்டு வந்தனர்.
புதுச்சேரி:
புனித பேட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 32-ம் ஆண்டு விளையாட்டு விழா பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
பள்ளியில் இருந்து விளையாட்டு மைதானத்திற்கு மாணவர்கள் ஜோதியினை கொண்டு வந்தனர். சிறப்பு விருந்தினர்களாக புதுவை தேசிய மாணவர் படை ஆணை யர் பியூஸ்ஸ்ரீவஸ் தவா, தனியார் நிறுவன மேலாளரும், முன்னாள் மாணவியுமான திவ்யா ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
புதுவை போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன், தனியார் மருத்துவமனை இயக்குனர் நல்லாம், பள்ளி முன்னாள் மாணவியும், மருத்துவருமான விக்னிதா ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.
நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் பிரடெ ரிக் வரவேற்றார். இதில் பள்ளியின் மருத்துவ இயக்குனர் ஜீட்டா பிரடெரிக், முதல்வர் அல்போன்ஸ் ஹில்டா மற்றும் பள்ளியின் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் சீதா ராமன், முத்தானந்தம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வித்துறை ஆசிரியர்கள் ஹேமலதா, ராயர், வனிதா, மணிவண்ணன் , ஹேமந்த் ஆகியோர் செய்திருந்தனர்.