என் மலர்
புதுச்சேரி
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு
- முன்னாள் மாணவர் சங்கம் வழங்கியது
- மாணவர் சங்க தலைவர் வக்கீல் நாராயணகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் பிரபு வரவேற்புரையாற்றினார்.
புதுச்சேரி:
அரியாங்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த 1980 முதல் 1988 வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் இப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.
விழாவுக்கு முன்னாள் மாணவர் சங்க தலைவர் வக்கீல் நாராயணகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் பிரபு வரவேற்புரையாற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக புதுவை கல்வித்துறை முதன்மை கல்வி அதிகாரி தனசெல்வம்நேரு, பள்ளி தலைமை ஆசிரியர் அமராவதி, முன்னாள் தலைமை ஆசிரியர்கள் அமர், அச்சுதன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.
மேலும் மாணவர்களை தேர்ச்சி பெற செய்த ஆசிரியர்களையும் பாராட்டி சால்வை அணிவித்து கவுரவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் மூர்த்தி, சந்தானம், முருகையன், இளஞ்செழியன் , செல்லப்பன், செல்வராஜ், பாபு, டேவிட் ஜோசப், முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.