search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புனித பேட்ரிக் மேல்நிலைப்பள்ளி 99.59 சதவீத தேர்ச்சி
    X

    சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் பிரடெரிக் ரெஜிஸ், மருத்துவ இயக்குனர் ஜீத்தா பிரடெரிக், முதல்வர் அல்போன்ஸ் ஹில்டா ஆகியோர் பாராட்டிய காட்சி.

    புனித பேட்ரிக் மேல்நிலைப்பள்ளி 99.59 சதவீத தேர்ச்சி

    • மாணவர்கள் 75 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண் பெற்று சாதனை புரிந்தனர்.
    • சமூக அறிவியலில் 1 மாணவர் 100 மதிப்பெண் பெற்றனர்.

    புதுச்சேரி:

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. புதுவை புனிதபேட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மொத்தம் 246 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 99.59 சதவீத தேர்ச்சியை பள்ளி பெற்றுள்ளது.

    500 மதிப்பெண்களுக்கு 491 மதிப்பெண்கள் பெற்று இலக்கியா என்ற மாணவியும் ஈசாக் என்ற மாணவனும் பள்ளியில் முதலிடம் பெற்றார். 490 மதிப்பெண் பெற்று மாணவி அனுஷ்ரி 2-ம் இடத்தையும், 489 மதிப்பெண் பெற்று மாணவி குருப்ரியா 3-ம் இடத்தையும் பெற்றனர்.

    பள்ளியில் தேர்வு எழுதிய 246 மாணவர்களில் 197 மாணவர்கள் 75 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண் பெற்று சாதனை புரிந்தனர்.

    தமிழில் 3 மாணவர்கள் 99 மதிப்பெண் பெற்றனர். இந்தியில் 2 மாணவர்கள் 92 மதிப்பெண் பெற்றனர்.

    பிரெஞ்சில் 3 மாணவர்கள் 98 மதிப்பெண் பெற்றனர். ஆங்கிலத்தில் 6 மாணவர்கள் 99 மதிப்பெண் பெற்றனர். கணிதத்தில் 10 மாணவர்கள் 100 மதிப்பெண் பெற்றனர். அறிவியலில் 8 மாணவர்கள் 100 மதிப்பெண் பெற்றனர். சமூக அறிவியலில் 1 மாணவர் 100 மதிப்பெண் பெற்றனர்.

    சாதனை படைத்த பள்ளி மாணவர்களை பள்ளி தாளாளர் பிரடெரிக் ரெஜிஸ், மருத்துவ இயக்கு னர் ஜீத்தா பிரடெரிக், முதல்வர் அல்போன்ஸ் ஹில்டா, ஆலோசனைக் குழு உறுப்பி னர்கள், வகுப்பாசிரியர்கள் முத்துகு மரன், ஆல்மா, பியுலா, செந்தமிழ் செல்வி, சோபியா ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    Next Story
    ×