என் மலர்
புதுச்சேரி
தமிழ் தொழிலதிபர்கள் வணிக கருத்தரங்கு
- தொழிலதிபர்கள் பங்கு பெறும் வணிக கருத்தரங்கம் தனியார் ஓட்டலில் நடந்தது.
- நக்கீரர் தமிழ் சங்க தலைவர் பாஸ்கரன் வரவேற்று பேசினார்.
புதுவை தமிழ் சங்கம் மற்றும் நக்கீரர் தமிழ் சங்கம் இணைந்து ராஜராஜ சோழன் 1038-வது சதய விழாவை முன்னிட்டு வளரும் தமிழ் தொழிலதிபர்கள் பங்கு பெறும் வணிக கருத்தரங்கம் தனியார் ஓட்டலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு புதுவை தமிழ் சங்க தலைவர் முத்து தலைமை தாங்கினார்.
திருச்சிராப்பள்ளி தமிழ் சங்க நிர்வாகி உதயகுமார் பெரியசாமி, புதுவை தமிழ் சங்க செயலாளர் சீனு மோகன்தாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நக்கீரர் தமிழ் சங்க தலைவர் பாஸ்கரன் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பாபு, புதுச்சேரி மருந்து உற்பத்தியாளர்கள் சங்க செயலாளரும் குரும்பாம்பட்டு தொழில் முனைவோர் கூட்டமைப்பு தலைவருமான சீனிவாசன், தமிழ் சங்க பலகை தலைவர் தமிழ் பித்தன், லேடர் கமர்சியல் நிறுவனர் செழியன் குமாரசாமி, தேசிய வர்த்தகர்கள் முன்னேற்ற பேரவை தலைவர் ஜோதிகுமார், தமிழ்நாடு அனைத்து சமையல் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் இனியவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
நிகழ்ச்சியில் மலேசிய தமிழ் அமைப்புகளின் பேரவை தலைவர் மலேசிய எழுத்தாளர் ராஜேந்திரனுக்கு பாராட்டு வழங்கப்பட்டது. இதில் குணவதி மைந்தன், கோபாலகிருஷ்ணன், சுரேஷ்பாபு, சங்கர், பெருமாள், சதீஷ் அசோகன், குமரன், எம்.ஜி.ஆர். மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக புதுவை தமிழ் சங்க பொருளாளர் அருள் செல்வம் நன்றி கூறினார்.