என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரி கடலுக்குள் பெருமாள் கோவில்?- மீனவர் வலையில் சிக்கிய சிலையால் பரபரப்பு
- கடலில் 1½ கிலோ மீட்டர் தூரத்தில் மீன் பிடிக்க வலையை வீசிய போது மீன்களுடன் பெருமாள் சிலை ஒன்று சிக்கியது.
- தகவல் அறிந்து வந்த காலாப்பட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவை சின்ன காலாப்பட்டை சேர்ந்த ராமச்சந்திரன் தலைமையில் அவரது மகன்கள் ராபின், ராபர்ட் ஆகியோர் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.
கடலில் 1½ கிலோ மீட்டர் தூரத்தில் மீன் பிடிக்க வலையை வீசிய போது மீன்களுடன் பெருமாள் சிலை ஒன்று சிக்கியது. அகலத்தில் 1½ அடியும் நீளத்தில் அரை அடியும் கொண்ட பெருமாள் தலை மட்டும் கிடைத்துள்ளது.
சிலையை பஞ்சாயத்தாரிடம் ஒப்படைத்தனர். சிலையை அந்த பகுதி மக்கள் பார்த்து சென்றனர். தகவல் அறிந்து வந்த காலாப்பட்டு போலீசார் விசாரணை நடத்தினர். இதனையடுத்து சிலையை போலீசாரிடம் பஞ்சாயத்தார் ஒப்படைத்தார்.
அந்த பகுதியை சேர்ந்த மீனவ முதியோர் தங்களுடைய முன்னோர் வழிபட்ட பெருமாள் கோவில் கடலுக்குள் இருப்பதாகவும் கடலுக்குள் சங்கு எடுக்க மூழ்கியவர்கள் பார்த்ததாகவும் குதிரையுடன் பெருமாள் சிலை இருப்பதாக தெரிவித்தார்.
தங்களுடைய முன்னோர்களும் மூதாதையர்களும் வழிபட்ட பெருமாள் கோவில் கடலுக்கு அடியில் இருப்பதை தற்போது கிடைத்துள்ள சிலை உறுதி செய்திருப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.