என் மலர்
புதுச்சேரி

புதுவை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் நடந்து சென்ற காட்சி.
புதுவையில் சுற்றுலா பயணிகள் வருகையால் களைகட்டிய கடற்கரை

- மணக்குள விநாயகர் கோவில், நோணாங்குப்பம் படகு குழாம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் களை கட்டியது.
- பாண்டி மெரினாவில் ஒட்டகம், குதிரை மீது ஏறி சவாரி செய்வதிலும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர்.
புதுச்சேரி:
புதுவையில் புனித வெள்ளி, சனி, ஞாயிறு விடுமுறை என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
இதன்காரணமாக புதுவையில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரப்பி வழிந்தன.
புதுவையில் நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பலர் விடுதி அறைக்குள் முடங்கினர். சிலர் தாவரவியல் பூங்கா , பாரதி பூங்காவில் தஞ்சம் அடைந்தனர்.
புதுவை கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு, பாண்டி மெரினா பீச்சில் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி ஆனந்த குளியல் போட்டனர்.
இதேபோல் மணக்குள விநாயகர் கோவில், நோணாங்குப்பம் படகு குழாம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் களை கட்டியது.
பாண்டி மெரினாவில் ஒட்டகம், குதிரை மீது ஏறி சவாரி செய்வதிலும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர்.
வெளிமாநில சுற்றுலா பயணிகள் வண்ண, வண்ண உடைகள் அணிந்தபடி ஒயிட்டவுன் பகுதிகளில் உள்ள தெருக்களில் வலம் வந்தனர். அங்குள்ள பாரம்பரிய கட்டிடங்கள் முன்பு நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
தொடர் விடுமுறை காரணமாக நோணாங்குப்பம் படகு குழாமில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
படகு குழாமில் ஏராளமானோர் குவிந்ததால் வெகு நேரமாக காத்திருந்து படகு சவாரி செய்தனர். கடந்த 3 நாட்களில் மட்டும் நோணாங்குப்பம் படகு குழாமிற்கு ரூ.22 லட்சம் வருவாய் கிடைத்தது.