என் மலர்
புதுச்சேரி
தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி டிரைவர் பலி
- பாகூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி டிரைவர் பலியானார்.
- ராஜா சம்பவத்தன்று வெளியே சென்று வருவதாக தனது தாய் அஞ்சலை தேவியிடம் கூறிச்சென்றார்.
புதுச்சேரி:
பாகூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி டிரைவர் பலியானார்.
பாகூர் அருகே தமிழகப் பகுதியான செம்மண்டலம் எஸ்.என்.சாவடி கெடிலம் ரோட்டுப்பகுதியை சேர்ந்தவர் அஞ்சமுத்து. இவரது மூத்த மகன் ராஜா (வயது 39) டிரைவர் வேலை செய்து வந்தார். திருமணமாகாத இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. மேலும் ராஜா வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார்.
ராஜா சம்பவத்தன்று வெளியே சென்று வருவதாக தனது தாய் அஞ்சலை தேவியிடம் கூறிச்சென்றார்.
ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்ப வில்லை.
இந்த நிலையில் ராஜா பாகூர் அருகே சோரியாங்கு ப்பம் தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி இறந்து கிடந்தார்.
குடிபோதையில் ஆற்றில் இறங்கிய போதோ அல்லது ஆற்றில் கால் கழுவும் போது வலிப்பு ஏற்பட்டதால் அவர் ஆற்றில் மூழ்கி இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
இது குறித்து அவரது சகோதரர் ராஜவேல் கொடுத்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.