என் மலர்
புதுச்சேரி
ரவுடியை கொலை செய்ய முயன்ற கும்பல் கைது
- புதுவை பெரியார் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் என்ற ராஜா. பிரபல ரவுடி.
- இவர் கொலை வழக்கு ஒன்றில் கைதாகி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
புதுவை பெரியார் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் என்ற ராஜா. பிரபல ரவுடி. இவர் கொலை வழக்கு ஒன்றில் கைதாகி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அப்போது இருவருக்கும் மற்றொரு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கண்டாக்டர் தோட்டத்தை சேர்ந்த ஸ்டிக்கர் மணி என்பவருக்கும் இடையில் விரோதம் ஏற்பட்டது. இதனால் இருவரும் சிறையிலேயே அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். இருவரும் தற்போது சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளனர்.
இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜ்குமார் தனது நண்பருடன் சேர்ந்து ஸ்டிக்கர் மணியை அடித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்டிக்கர் மணி ராஜ்குமாரை பழிவாங்க முடிவு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் இரவு நெல்லித்தோப்பு பெரியார்நகரில் உள்ள அரசு பள்ளி அருகில் நடந்து சென்றுக் கொண்டிருந்த ராஜ்குமாரை கொலை செய்யும் முயற்சியில் ஸ்டிக்கர்மணி, கோவிந்தசாலையை சேர்ந்த சஞ்சய்குமார், ஆட்டுப்பட்டியை சேர்ந்த பாலாஜி, நோனாங்குப்பத்தை சேர்ந்த வீரமணிகண்டன், கோவிந்தசாலை கபாலி, நோனாங்குப்பம் சஞ்சய், சூர்யா மற்றும் சிலர் சேர்ந்து அவரை தாக்கினர்.
அந்த நேரத்தில் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் ரோந்தில் ஈடுபட்டனர். அவர்கள் இச்சம்பவத்தை பார்த்ததும் விரைந்து வந்து, தகராறில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயன்றனர். அதில் பால்ராஜ், சசிகுமார், மணிகண்டன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மற்றவர்கள் தப்பியோடி விட்டனர்.
கைது செய்யப்பட்டவர்க ளிட மிருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய மற்றவர்களை போலீசார் தேடிவருகின்றனர். போலீசார் சரியான நேரத்தில் அங்கு சென்றதால் கொலை சம்பவம் தடுக்கப்பட்டது.