என் மலர்
புதுச்சேரி

எம்.ஆர்.எப்.தொழிற்சாலையின் நிர்வாக இயக்குனர் மற்றும் குழு மேலாளர் மற்றும் தயாரிப்பு மேலாளர் ஆகியோரை சந்தித்து ஒரு மனு அளித்த காட்சி.
ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை உடனே தொடங்க வேண்டும்

- பேச்சு வார்த்தைக்கு பாட்டாளி தொழிற்ச ங்கத்தை அழைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
- எம்.ஆர்.எப்.தொழிற்சங்க தலைவர் விஜயன், செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் பண்டாரி நாதன்,ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கத்தில் எம்.ஆர்.எப்.தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இந்த நிலையில் பா.ம.க. மாநில அமைப்பாளர் கணபதி தலைமையில் எம்.ஆர்.எப்.தொழிற்சங்க கவுரவ தலைவரும் மாநில துணை அமைப்பாளருமான நெட்டப்பாக்கம் புருஷோ த்தமன் முன்னிலையில் எம்.ஆர்.எப்.தொழிற்சாலையின் நிர்வாக இயக்குனர் மற்றும் குழு மேலாளர் மற்றும் தயாரிப்பு மேலாளர் ஆகியோரை சந்தித்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் எம்.ஆர்.எப்.தொழிற்சாலையில் 4 ஆண்டு களுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஊதிய உயர்வு பேச்சு வார்த்தை யை உடனே தொடங்க வேண்டும். பேச்சு வார்த்தைக்கு பாட்டாளி தொழிற்ச ங்கத்தை அழைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் போது எம்.ஆர்.எப்.தொழிற்சங்க தலைவர் விஜயன், செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் பண்டாரி நாதன்,ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.