என் மலர்
புதுச்சேரி

ஊரல்குளம் மண் கொட்டி மூடப்பட்டுள்ள காட்சி.
ஊரல் குளம் மூடப்பட்டது

- எம்.என்.குப்பத்திலிருந்து கெங்கராம்பாளையம் வரை 4 வழி சாலை பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது.
- இதனால் சாலைகளின் அருகில் இருந்த ஊரல் குளங்கள் மூடப்பட்டு பாதி இடத்தில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.
புதுச்சேரி:
புதுவை - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் எம்.என்.குப்பத்திலிருந்து கெங்கராம்பாளையம் வரை 4 வழி சாலை பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது.
இதனால் சாலைகளின் அருகில் இருந்த ஊரல் குளங்கள் மூடப்பட்டு பாதி இடத்தில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. திருவாண்டார் கோவில் பஞ்சநாதீஸ்வரர் சிவன் கோவில் அருகில் பல நூற்றாண்டுகளைக் கடந்த ஊரல் குளம் அமைந்துள்ளது.
இந்த குளத்தின் நீர் திருவண்டார்கோவில் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களுக்கு குடிநீர் பற்றாக்குறையினை போக்கி வந்தது. தற்போது இந்த குளத்தை பாதியாக மூடி மண் நிரப்பி கால்வாய் மற்றும் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.
மழைக்காலங்களில் மழை நீர் மதகடிப்பட்டு வளவனூர் வாய்க்கால், வழியாக திருபுவனை ஏரியை அடைந்து. பின்னர் திருவாண்டார் கோவில் ஊரல் குளத்தில் தண்ணீர் நிரம்பி பின்னர் வழிந்து ஆழியூர் ஏரிக்கு வாய்க்கால் மூலமாக தண்ணீர் செல்வது வழக்கம். இந்த நீர் அமைப்பு முறை கிராமப்புற மக்களின் குடிநீர் தேவையை போக்கி சுத்தமான குடிநீர் கிடைக்க மன்னர்கள் காலத்தில் இந்த ஊரல் குளங்கள் முக்கிய பங்கு அளித்து வந்த நிலையில், தற்போது இந்த குளத்தை பாதி அளவில் முடி சாலை அமைத்து வருவது, வருகின்ற காலங்களில் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.