என் மலர்
புதுச்சேரி
X
இந்திராநகர் தொகுதியில் பொதுப்பணித்துறை மூலம் நடைபெறும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
Byமாலை மலர்4 Nov 2023 11:57 AM IST
- அதிகாரிகளுக்கு ஏ.கே.டி.ஆறுமுகம் எம்.எல்.ஏ. அறிவுறுத்தல்
- புதிய சாலை அமைத்தல் என பொதுப்பணித்துறை மூலம் வேலைகளை விரைந்து முடிக்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை இந்திராநகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தற்போது நடைபெற்று வரும் பொதுப்பணித்துறை மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்து பொறியாளர்களுடன் கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் சட்டசபை வளாகத்தில் உள்ள அரசு கொறடா அலுவலகத்தில் நடந்தது.
அரசு கொறடாவும், இந்திரா நகர் தொகுதி எம்.எல்.ஏவுமான ஏ.கே.டி. ஆறுமுகம் தலைமை தாங்கினார். இதில் பொதுப் பணித்துறை இளநிலை பொறியாளர், நிர்வாக பொறியாளர், முதன்மை பொறியாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்கள் பயன் பாட்டுக்கு கழிவுநீர் கால்வாய், புதிய குடிநீர் குழாய் அமைத்தல், புதிய சாலை அமைத்தல் என பொதுப்பணித்துறை மூலம் வேலைகளை விரைந்து முடிக்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
Next Story
×
X