என் மலர்
புதுச்சேரி
விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பு
- விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
- திருக்கனூர் பகுதியில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி:
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திருக்கனூர் பகுதியில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
திருக்கனூரை அடுத்த கொ. மணவெளி மற்றும் தமிழகப் பகுதியான தி.புதுக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு நடைபெற்று வருகிறது. 3 அடி முதல் 16 அடி உயரம் வரை பல்வேறு அளவுகளில் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.
3½ அடி விநாயகர் சிலை 3ஆயிரம் முதல் விற்கப்படுகிறது. 16 அடி உயரம் விநாயகர் சிலை 40 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. 2 ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமான முறையில் கொண்டாடப்படவில்லை.
அதனால் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பான முறையில் கொண்டாடப்படும் என்ற நம்பிக்கையில் விநாயகர் சிலைகளை அதிக அளவில் தயாரித்து வருகிறார்கள்.
விநாயகர் சிலை விற்பனையும் இந்தாண்டு நல்ல முறையில் இருப்பதாகவும்,தயாரிக்கப்படும் அனைத்து விநாயகர் சிலைகளும் விற்று விடும் என நம்புவதாகவும் விநாயகர் சிலை தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள்.