என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
புதுச்சேரி
![ஆரோவில் தமிழ் மரபு மையத்தில் திருவள்ளுவர் சிலை ஆரோவில் தமிழ் மரபு மையத்தில் திருவள்ளுவர் சிலை](https://media.maalaimalar.com/h-upload/2023/06/21/1901893-govrn.webp)
திருவள்ளுவர் சிலையை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திறந்து வைத்த காட்சி.
ஆரோவில் தமிழ் மரபு மையத்தில் திருவள்ளுவர் சிலை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திறந்து வைத்தார்
- தமிழ் மரபு மைய வளாகத்தில் திறக்கப்பட்ட இந்த திருவள்ளுவர் சிலை சென்னை மகாபலிபுரத்தில் ஒரே கல்லால் தயாரிக்கப்பட்டது.
புதுச்சேரி:
ஆரோவில் சர்வதேச நகரத்தில் தொடங்கிய நிரந்தர புகைப்பட கண்காட்சி மையத்தினை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பார்வையிட்டார். "தி கலர்ஸ் ஆப் லைப்" என்னும் தலைப்பில் ஓவியர் சத்திய அருணாச்சலம் உருவாக்கிய ஆயில் மற்றும் ஆக்கிரலிக் மூலம் உருவாக்கப்பட்ட ஓவியங்கள் இதில் இடம் பெற்று இருந்தது.
பின்னர் ஒடிசா மாநில கலைஞர்களின் கண் கவரும் கலை நிகழ்ச்சியை பார்வையிட்டார். பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த கலாச்சார மையங்கள் இயங்கி வரும் பாரத் நிவாஷில் பல கோடி செலவில் உருவாக்கப்பட்டு வரும் தமிழ் மரபு மைய வளாகத்தில் முழு உருவ திருவள்ளுவர் சிலையை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திறந்து வைத்தார்.
திறக்கப்பட்ட சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அனைவர்கள் மத்தியில் திருக்குறளையும் வாசித்தார். தமிழ் மரபு மைய வளாகத்தில் திறக்கப்பட்ட இந்த திருவள்ளுவர் சிலை சென்னை மகாபலிபுரத்தில் ஒரே கல்லால் தயாரிக்கப்பட்டது. மேலும் இந்த சிலையை வி.ஜி.பி நிறுவனம் சார்பில் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பரிசாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சிகளில் ஆரோவில் செயலர் ஜெயந்தி ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.