search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சத்திரிய குருகுலத்தில் முப்பெரும் விழா-சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பங்கேற்பு
    X

    விழாவில் மாணவ-மாணவிகளுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சான்றிதழ் வழங்கிய காட்சி.

    சத்திரிய குருகுலத்தில் முப்பெரும் விழா-சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பங்கேற்பு

    • புதுவை அரசு கலைமாமணி விருதாளர் சங்கம் சார்பில், உழவர் திருவிழா, நாட்டுப்புற கலைவிழா, திருவள்ளுவர் தின விழா ஆகிய முப்பெரும் விழா பூரணாங்குப்பம் ஜோதி சிலம்பம் சத்திரிய குருகுலத்தில் நடந்தது.
    • விழாவில் தொடக்கமாக கலைமாமணி தட்சணாமூர்த்தி குழுவினரின் மங்கள இசை நடைபெற்றது. விழாவையொட்டி திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    புதுச்சேரி:

    புதுவை அரசு கலைமாமணி விருதாளர் சங்கம் சார்பில், உழவர் திருவிழா, நாட்டுப்புற கலைவிழா, திருவள்ளுவர் தின விழா ஆகிய முப்பெரும் விழா பூரணாங்குப்பம் ஜோதி சிலம்பம் சத்திரிய குருகுலத்தில் நடந்தது.

    விழாவிற்கு விருதாளர் சங்க நிறுவனச்செயலாளர் தமிழ்வாணன் வரவேற்றார். சங்க பொருளாளர் ஜோதி செந்தில்கண்ணன் தலைமை தாங்கினார். கலைமாமணி நெல்லைராஜன் முன்னிலை வகித்தார். தலைவர் அரியபுத்திரி நோக்கவுரை ஆற்றினார். கலைமாமணி டாக்டர் கிருஷ்ணமூர்த்தி வாழ்த்துரை வழங்கினார். விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    விழாவில் தொடக்கமாக கலைமாமணி தட்சணாமூர்த்தி குழுவினரின் மங்கள இசை நடைபெற்றது. விழாவையொட்டி திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. உழவு மாமணி விருது கருணாகரன், மறைந்த துளசி மணவாளன், டாக்டர் பாலாஜி கிருஷ்ணசாமி ஆகியோருக்கும், நாட்டுப்புற கலை ரத்னா விருது சிலம்புசேகர், சிவப்பிரகாஷ் ஆகியோருக்கும், திருக்குறள் சுடர் விருது சிறுவன் அமுதன், மாணவி சவுமியா ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் சகாதேவன், பரமகேது, ராஜாராம், குமார், ராமலிங்கம் மற்றும் சத்திரிய சேனா சேவகத்தின் பொறுப்பாளர்கள் வெற்றிச்செல்வன், சுவாதிகிருஷ்ணன், பெரியசாமி, ஆனந்தராஜ், சங்கரன், ரவிக்குமார் ஆகியோர் கல ந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் சிவகுமார் நன்றி கூறினார்.

    விழாவில் கடந்த டிசம்பர் மாதம் புதுவை கடற்கரை பகுதியில் நடந்த கர்லாகட்டை சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கு பெற்ற குருகுல மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    Next Story
    ×