search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கஸ்தூரிபாய் காந்தி பள்ளியில் முப்பெரும் விழா
    X

     செந்தில்குமார் எம்.எல்.ஏ. முதலிடம் பெற்ற மாணவர்களை பாராட்டிய காட்சி.

    கஸ்தூரிபாய் காந்தி பள்ளியில் முப்பெரும் விழா

    • கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.
    • மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்குதல், மாணவிகளுக்கு சீருடை மற்றும் தையல் தொகை வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

    புதுச்சேரி:

    கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

    இதில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டுதல், சென்ற ஆண்டு 9-ஆம் வகுப்பு படித்த மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்குதல், மாணவிகளுக்கு சீருடை மற்றும் தையல் தொகை வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பள்ளித் துணை முதல்வர் மஞ்சுளா தலைமை தாங்கினார். பள்ளித் தலைமையாசிரியர் கிளாடின் கிரேஸ் மெக்பர்லேன் முன்னிலை வகித்தார்.தமிழ் விரிவுரையாளர் ராஜசேகரி வரவேற்றார். செந்தில்குமார் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு முதலிடம் பெற்ற மாண வர்களை பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். மேலும் இலவச சைக்கிள், சிறுகதைகளை வழங்கினார். பின்னர் ஆசிரியர்களை பாராட்டினார்.

    நிகழ்ச்சியில் விலங்கியல் விரிவுரையாளர், லோகேஸ்வரி, தமிழாசிரியர் முனைவர் வெற்றிவேல் ஆகியோர் கலந்து கொண்ட னர். முடிவில் சமூக அறிவியல் ஆசிரியர் கிருஷ்ண மூர்த்தி நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை கணித ஆசிரியர் அருளரசன் தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×