search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியில் திருப்பதி தேவஸ்தான கோவில் கட்டப்படும்- அறங்காவலர் குழு தலைவர் உறுதி
    X

    புதுச்சேரியில் திருப்பதி தேவஸ்தான கோவில் கட்டப்படும்- அறங்காவலர் குழு தலைவர் உறுதி

    • புதுவை நேரு வீதியில், மீண்டும் திருப்பதி தேவஸ்தான கோவிலை கட்ட வலியுறுத்தி மனு அளித்தார்.
    • மனுவினை பெற்றுக்கொண்ட சுப்பா ரெட்டி புதுவையில் மீண்டும் தேவஸ்தானம் சார்பில் கோவில் கட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை நேரு வீதியில், திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில் தகவல் மையத்துடன் அமைந்திருந்தது. இக்கோவிலுக்கு புதுவை மட்டுமின்றி தமிழக பகுதி பக்தர்களும் அதிகளவில் வந்து சென்றனர்.

    தகவல் மையத்தில் திருப்பதி கோவிலில் தரிசனத்திற்கு முன்பதிவு செய்தும், திருப்பதி லட்டு பிரசாதமும் பெற்று வந்தனர்.

    பழமை வாய்ந்த இக்கோவில் வலுவிழந்ததால், பாதுகாப்பு கருதி மூடப்பட்டது. ஆனால் இதுநாள் வரை கோவில் கட்டுமான பணி துவங்கப்படவில்லை.

    இதனால், ஏமாற்றத்திற்கு உள்ளான பக்தர்கள், மீண்டும் கோவிலை கட்ட வலியுறுத்தி தொடர் அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் திருப்பதி சென்ற அசோக்பாபு எம்.எல்.ஏ. பா.ஜ. மாநில செயலாளர் ரத்தினவேலு, விவசாய அணி தலைவர் புகழேந்தி ஆகியோர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவல் குழு தலைவர் சுப்பா ரெட்டியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.

    அப்போது புதுவை நேரு வீதியில், மீண்டும் திருப்பதி தேவஸ்தான கோவிலை கட்ட வலியுறுத்தி மனு அளித்தார்.

    மனுவினை பெற்றுக்கொண்ட சுப்பா ரெட்டி புதுவையில் மீண்டும் தேவஸ்தானம் சார்பில் கோவில் கட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    இதுகுறித்து அசோக்பாபு எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    புதுவை நேரு வீதியில் திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்ற அறங்காவல் குழு தலைவர் சுப்பா ரெட்டி உடனடியாக என்ஜினீயர்களை அழைத்து திட்ட அறிக்கை தயாரிக்க அறிவுறுத்தினார்.

    மேலும் புதுவையில் பிரமாண்டமான திருப்பதி கோவில் கட்டவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக கூறினார்.

    Next Story
    ×