என் மலர்
புதுச்சேரி

மின் விளக்குகள் இல்லாததால் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்
திருபுவனை ஏரிக்கரை பகுதி சாலையில் மின் விளக்குகள் எரியாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்

- சென்னை - நாகப் பட்டினம் 4 வழி சாலை விரிவாக்க பணிக்காக எம்.என்.குப்பத்திலிருந்து கெங்கராம் பாளையம் வரை 500-க்கும் மேற்பட்ட மின்விளக்குகளை சாலையில் இருந்து அகற்றி உள்ளார்கள்.
- சாலையின் இரு புறமும் உயர் மின்ன ழுத்த டவர்கள் மற்றும் சாலை ஓரம் சிறிய டவர்கள் அமைத்து மின்சாரத்தை வழங்கி வருகிறார்கள்.
புதுச்சேரி:
சென்னை - நாகப் பட்டினம் 4 வழி சாலை விரிவாக்க பணிக்காக எம்.என்.குப்பத்திலிருந்து கெங்கராம் பாளையம் வரை 500-க்கும் மேற்பட்ட மின்விளக்குகளை சாலையில் இருந்து அகற்றி உள்ளார்கள். சாலையின் இரு புறமும் உயர் மின்ன ழுத்த டவர்கள் மற்றும் சாலை ஓரம் சிறிய டவர்கள் அமைத்து மின்சாரத்தை வழங்கி வருகிறார்கள். தமிழ்நாடு மற்றும் புதுவை துறையுடன் இணைந்து சாலை போடும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் கண்டமங்கலம், திருவண்டார்கோயில், திருபுவனை, மதகடிப்பட்டு, கெங்கராம்பாளையம் ஆகிய 5-க்கும் மேற்பட்ட முக்கிய பஸ் நிறுத்த பகுதிகள், சாலையோர பகுதிகள், கடைவீதிகள், மக்கள் நடமாடும் முக்கிய வீதிகளில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெறும் இடங்களில், மின்விளக்கு கள் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகின்றது.
இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. முக்கியமாக இரவு நேரங்களில் போதிய மின்விளக்கு வசதி இல்லாத நிலையில், அனைத்து வாகனங்களும் இருளில் செல்ல முடியாமல், வாகனங்கள் ஆங்காங்கே நின்று பின்னர் செல்கின்றன.
இதனால் இரவு நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலை உள்ளது. இந்த பகுதியில் 7 தற்காலிக மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என்று, வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சாலைகள் விரிவாக்க பணியின் போது அகற்றப்பட்ட மின் கம்பங்களை தற்போது கிராமப்புறங்களில் உள்ள தெருக்களில் மின்துறை ஊழியர்கள் நட்டு மின்சார த்தை வழங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.