search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மாநில அந்தஸ்து தீர்மானம் நிறைவேற்ற சிறப்பு சட்டமன்றத்தை கூட்ட வேண்டும்
    X

    கோப்பு படம்.

    மாநில அந்தஸ்து தீர்மானம் நிறைவேற்ற சிறப்பு சட்டமன்றத்தை கூட்ட வேண்டும்

    • கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • மாநில சட்டமன்றத்தால் நிறைவேற் றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு திருப்பி அனுப்பி இருக்கிறது

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி

    எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    புதுச்சேரி மாநிலம் முன் எப்போதும் இல்லாத வகையில் பல நெருக்கடி களை சந்தித்து வருகிறது. மாநிலத்தில் நிலவுகின்ற பல்வேறு முக்கியமான பிரச்சினைகளை உடனுக் குடன் தீர்ப்பதற்கு நமக்கு நிதி அதிகாரமும், நிர்வாக அதிகாரமும் இல்லை. இதனை உணர்ந்துதான் மாநில முதல்-அமைச்சர் ரங்கசாமி நமது மாநிலத்திற்கு முழு அதி காரம் வேண்டும் என தொடர்ந்து மத்திய அரசினை வலியுறுத்தி வந்தார்.

    இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத் தொட ரின்போது சட்டசபையில் அனைத்து கட்சி ஆதரவுடன் 14-வது முறையாக மாநில அந்தஸ்து தீர்மானம் ஒரு மனதாக நிறை வேற்ற ப்பட்டது.

    அந்தத் தீர்மானத்தை கவர்னர் காலம் கடந்து அனுப்பி வைத்தார். இந்த நிலையில் மாநில சட்டமன்றத்தால் நிறைவேற் றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு திருப்பி அனுப்பி இருக்கிறது. இது புதுச்சேரி மாநில மக்களை அவமா னப்படுத்தும் வித மாக உள்ளது.

    புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வேண்டுமென்று கடந்த 1996-2000-ம் ஆண்டில் அமைந்த தி.மு.க. கூட்டணி ஆட்சியில் முதல்வராக இருந்த ஜானகிராமன் அப்போதைய ஒன்றிய உள்துறை அமைச்சர்கள் இந்திரஜித் குப்தா மற்றும் எல்.கே. அத்வானி உள்ளிட்ட அமைச்சர்களை அனைத்துக் கட்சி பிரதி நிதிகளோடு சந்தித்து, புது வைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    இதைப்போல் உடன டியாக முதல்-அமைச்சர் ரங்கசாமி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். அது மட்டு மல்லாமல் உடனடியாக சட்டமன்றத்தில் சிறப்பு கூட்டத்தை கூட்டி, புதுச் சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வேண்டுமென்று சிறப்பு தீர்மானத்தை நிறை வேற்ற வேண்டும். அந்த தீர்மானத்தோடு பிரதமர் மற்றும் உள்துறை மந்திரி ஆகியோரை சந்தித்து முறையிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×