என் மலர்
புதுச்சேரி
பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்துவது குறித்து பயிற்சி
- ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தடை உத்தரவை அமல்படுத்தும் வழிமுறைகள் குறித்து அதிகாரிகளுக்கு செயல் விளக்க கூட்டம் நடத்தப்பட்டது.
- மாசுக்கட்டுப்பாட்டு துறை சீனியர் என்ஜினீயர் ரமேஷ் தலமை தாங்கினார்.
புதுச்சேரி:
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தடை உத்தரவை அமல்படுத்தும் வழிமுறைகள் குறித்து அதிகாரிகளுக்கு செயல் விளக்க கூட்டம் நடத்தப்பட்டது.
புதுவை அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மாசு கட்டுப்பாட்டு குழும அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு சுற்றுச்சூழல், மாசுக்கட்டுப்பாட்டு துறை சீனியர் என்ஜினீயர் ரமேஷ் தலமை தாங்கினார். இதில் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு, கடந்த ஜூலை 1-ந் தேதியில் இருந்து நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை ஆணையை புதுவை மாவட்டத்தில் அமல்படுத்துவதற்கான மத்திய அரசு பொர்டல் எனப்படும் அமைப்பு மூலம் கண்காணிக்க உள்ளது. இதனை புதுவையில் உள்ள சுற்றுச்சூழல் துறை, நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் அமுல்படுத்தும் வழிமுறைகள் குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தொடர்ந்து புதுவையில் ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் விபரங்கள் குறித்தும், அவற்றால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகள் தொடர்பாகவும், அவற்றின் பயன்பாட்டை முற்றிலும் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து, படக் காட்சிகளுடன் விளக்கம் அளித்தார்.
இப்பயிற்சி முகாமில், புதுவை நகராட்சி, உழவர்கரை நகராட்சி, பாகூர், நெட்டப்பாக்கம், வில்லியனுார், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், புதுவை மாசுக் கட்டுப்பாட்டு குழுமத்தின் அறிவியல் உதவியாளர் செல்வநாயகி, தினேஷ், விமல்ராஜ் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.