search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பழங்குடியினர் கைவினை பொருட்கள் கண்காட்சி
    X

    கடற்கரை காந்தி திடலில் நடைபெறும் பழங்குடியினர் கைவினை கண்காட்சியில் ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் சாய். இளங்கோவன் பார்வையிட்டு பொருட்களை வாங்கிய காட்சி.

    பழங்குடியினர் கைவினை பொருட்கள் கண்காட்சி

    • இயக்குனர் சாய்‌.இளங்கோவன் பார்வையிட்டார்
    • கைவினைப் பொருட்கள், கலை, ஓவியங்கள், ஆடைகள் ,நகைகள், ஆகியவற்றை பார்வையிட்டு பழங்குடி மக்களின் செயல்பாடுகளை கேட்டறிந்து வெகுவாக பாராட்டினார்.

    புதுச்சேரி:

    மத்திய அரசின் பழங்குடியினர் நல அமைச்சகம் மற்றும் பழங்குடி கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பில் புதுவை கடற்கரை காந்தி திடலில் ஆடி பஜார் என்ற பெயரில் கைவினை கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது.

    இதனை எம்.பி.க்கள் வைத்திலிங்கம், செல்வகணபதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இந்த நிலையில், பழங்குடி கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பின் அழைப்பின் பேரில் புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் சாய்.இளங்கோவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டார். மேலும்,நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியினரின் கைவினைப் பொருட்கள், கலை, ஓவியங்கள், ஆடைகள் ,நகைகள், ஆகியவற்றை பார்வையிட்டு பழங்குடி மக்களின் செயல்பாடுகளை கேட்டறிந்து வெகுவாக பாராட்டினார்.

    மேலும், அடுத்த மாதம் 4-ந் தேதி புதுடெல்லியில் நடைபெறும் பழங்குடியினர் கைவினை கண்காட்சியில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து 2 பேர் முதல் 8 பேர் வரை பங்கேற்கலாம் என்றும் அவர்களுக்கான முழு செலவையும் மத்திய அரசு ஏற்க உள்ளதாக ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனரிடம் கண்காட்சி பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் ராஜேஷ் கண்ணா,ராஜா,சாக்ரடீஸ்,வித்யாவதி,பண்டக காப்பாளர் அமிர்தலிங்கம் மற்றும் பழனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×