search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    திருச்சி கல்லூரி அணி வெற்றி-சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பரிசு கோப்பை வழங்கினார்
    X

    கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம், எம்.எல்.ஏ. வி.பி.ராமலிங்கம், விவியன் ரிச்சர்ட் ஆகியோர் பரிசு கோப்பை வழங்கிய காட்சி.

    திருச்சி கல்லூரி அணி வெற்றி-சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பரிசு கோப்பை வழங்கினார்

    • புதுச்சேரி, தமிழ்நாடு கேரளா மாநிலங்களில் இருந்து 28 அணிகள் பங்கு பெற்று விளையாடின.
    • பா.ஜனதா பிரமுகர்கள் டி. எம். வருண், முருகன் என்கிற பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை கால்பந்து நண்பர்கள் கழகம் சார்பில் நடத்திய 21-ம் ஆண்டு சுதந்திர தின கால்பந்தாட்ட போட்டிகள் புதுவை காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 3 நாட்கள் நடைபெற்றது.

    இப்போட்டியில் புதுச்சேரி, தமிழ்நாடு கேரளா மாநிலங்களில் இருந்து 28 அணிகள் பங்கு பெற்று விளையாடின. போட்டிகள் அனைத்தும் நாக்கவுட் முறையில் நடைபெற்றது.

    இறுதிப் போட்டியில் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அணியும் புதுச்சேரி பி.கே. பிரதர்ஸ் அணியும் விளையாடின.

    இதில் 2 அணிகளும் போட்டி நேரத்தில் சமநிலையில் இருந்ததால் டை பிரேக்கர் முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. அதில் திருச்சி சென் ஜோசப் கல்லூரி அணியினர் வெற்றி பெற்று முதல் பரிசை வென்றனர். பரிசளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம், எம்.எல்.ஏ.க்கள் விவிலியன் ரிச்சர்ட் ஜான்குமார், வி.பி. ராமலிங்கம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு கோப்பைகள் மற்றும் ரொக்க பரிசினை வழங்கினர்.

    இந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா பிரமுகர்கள் டி. எம். வருண், முருகன் என்கிற பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×