search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வ.உ.சி. சிலை சதுக்கத்தை அழகுபடுத்த வேண்டும்-வி.பி. ராமலிங்கம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    X

    கோப்பு படம்.

    வ.உ.சி. சிலை சதுக்கத்தை அழகுபடுத்த வேண்டும்-வி.பி. ராமலிங்கம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

    • வ.உ. சிதம்ப ரம்பிள்ளையை கவுரப்படுத்தும் வகையில் அவரது சிலைக்கு நிழற்குடை அமைத்தும், மின் விளக்குகள் அமைத்தும் சிலை உள்ள சதுக்கத்தை அழகுப்படுத்த வேண்டும்.
    • இந்த நிதியாண்டில் இவ்வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளத்துக்கென்று தனியாக நிதியை ஒதுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை சட்சபையில் மானிய கோரிக்கை விவாதத்தில் வி.பி. ராமலிங்கம் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 150-வது பிறந்தநாள் ஆண்டிலேயே, சட்டசபை எதிரே உள்ள அவரது சிலைக்கு நிழற்குடை அமைத்தும், அதன் வளாகத்தை அழகுபடுத்தவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு அது பொதுப்பணித் துறை வரை சென்று நிலுவையில் உள்ளது.

    எனவே வ.உ. சிதம்ப ரம்பிள்ளையை கவுரப்படுத்தும் வகையில் அவரது சிலைக்கு நிழற்குடை அமைத்தும், மின் விளக்குகள் அமைத்தும் சிலை உள்ள சதுக்கத்தை அழகுப்படுத்த வேண்டும்.

    மேலும் குடிசை மாற்று வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 3 வருடங்களாக சரிவர சம்பளம் வழங்கப்பட வில்லை. 9 மாத சம்பளம் தரப்படாமல் உள்ளது. காமராஜர் கல்வீடு கட்டும் திட்டம் மற்றும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா மூலமாக பொதுமக்களுக்கு மானியம் வழங்கும் சிறப்பாக செயல்பட்டு 2 முறை மத்திய அரசின் விருதினை பெற்று தந்து புதுவைக்கு பெருமை சேர்த்துள்ளது.

    எனவே இந்த நிதியாண்டில் இவ்வாரி யத்தில் பணிபுரியும் ஊழியர்க ளுக்கு சம்பளத்துக்கென்று தனியாக நிதியை ஒதுக்க வேண்டும். அதோடு இங்கு பணிபுரியும் தினக்கூலி மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் 15 வருடத்திற்கு மேலாக பணி புரிந்தும், பணிநிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர்.இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×