search icon
என் மலர்tooltip icon

    Recap 2024

    2024 ரீவைண்ட்:  நயன்தாரா.. ஆவணப்படமும் அதன்பின் முளைத்த சர்ச்சைகளும்..!
    X

    2024 ரீவைண்ட்: நயன்தாரா.. ஆவணப்படமும் அதன்பின் முளைத்த சர்ச்சைகளும்..!

    • தனுஷை விமர்சித்து நயன்தாரா 3 பக்க அறிக்கையை வெளியிட்டார்.
    • 'வாழு வாழ விடு' என்று தனுஷ் பேசிய காணொலியைப் பகிர்ந்து, தனுஷ் மீதான குற்றச்சாட்டையும் டேக் செய்து இருந்தார் விக்னேஷ் சிவன்.

    தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுவர் நடிகை நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு உயிர், உலக் என இரு மகன்கள் உள்ளனர்.



    இதனிடையே நயன்தாராவின் காதல் மற்றும் திருமண வாழ்க்கையை மையமாக வைத்து உருவான ஆவணப்படம் "Nayanthara: Beyond the Fairy Tale". இந்த ஆவணப்படத்தில் திரையுலகில் தான் சந்தித்த வெற்றி, தோல்வி, சவால்கள், காதல், கல்யாணம் என பல விஷயங்களை நயன்தாரா பகிர்ந்து உள்ளார். இதனையடுத்து இந்த ஆவணப்படம் நயன்தாரா பிறந்தநாளான நவம்பர் 18-ந்தேதி அன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.



    இந்த படத்தில், 'நானும் ரவுடிதான்' படத்தின் பாடல் காட்சிகளை வெளியிட படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷிடம் தடையின்மை சான்று (NOC) கோரப்பட்டது. ஆனால், அவர் இவர்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்கவில்லை. இரண்டு ஆண்டுகளாக பதில் சொல்லாமல், தடையின்மை சான்று தராமல் இருந்ததை தொடர்ந்து, நயன்தாரா அவரை விமர்சித்து 3 பக்க அறிக்கையை வெளியிட்டார்.



    இதனிடையே தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட கடிதத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த விக்னேஷ் சிவன், சர்ச்சைக்குள்ளான அந்தக் காட்சியையும் பகிர்ந்து, "இந்த சிறிய காட்சிக்குத்தான் ரூ.10 கோடி கேட்டார்கள். அதை இங்கே இலவசமாகவே பகிர்கிறேன் நீங்களே பாருங்கள். அன்பைப் பரப்புங்க சார்" என்று தனுஷை மறைமுகமாகச் சாடினார். மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'வாழு வாழ விடு' என்று தனுஷ் பேசிய காணொலியைப் பகிர்ந்து, தனுஷ் மீதான குற்றச்சாட்டையும் டேக் செய்து இருந்தார் விக்னேஷ் சிவன்.

    இந்த விவகாரம் கோலிவுட்டில் சர்ச்சை ஏற்படுத்தி பேசுபொருளானது. இதனிடையே, தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளர் இல்ல திருமண நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில் வேஷ்டி சட்டையில் தனுஷும், சேலையில் நயன்தாராவும் அவருடன் விக்னேஷ் சிவனும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நயன்தாரா மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் அருகருகே அமர்ந்திருந்தாலும், இருவருக்கும் இடையே பிரச்சனை நடந்து வருவதால் ஒருவருக்கொருவர் முகம் கொடுத்து கூட பார்த்துக் கொள்ளாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.



    இதற்கிடையே, 'நானும் ரவுடிதான்' படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட மூன்று வினாடி BTS காட்சிகள் ஆவணப்படத்தில் இடம்பெற்றதாகவும், இதற்காக 10 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று தனுஷ் கோரியிருந்தார்.

    ஆனால், தனுஷின் கோரிக்கைக்கு எந்த பதிலும் அளிக்காமல், அந்த காட்சிகளுடன் ஆவணப்படம் வெளியானது. அதன்பின்னரும் காட்சிகளை நீக்க கால அவகாசம் வழங்கி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. எனினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தனுஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆவணப்படத்தில் தனுஷ் தயாரித்த படத்தின் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும், இதற்கு தன்னிடம் அனுமதி பெறவில்லை என அவர் தெரிவித்து இருந்தார். இதையடுத்து ரூ.10 கோடி நஷ்டஈடு கோரியுள்ள வழக்கில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பதில் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    Next Story
    ×