என் மலர்
Recap 2024
2024 ரீவைண்ட் - ஓராண்டுக்கு மேல் சிறையில் செந்தில் பாலாஜி
- கடந்த 2021-ம் ஆண்டு திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பொறுப்பேற்றார்.
- உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.
கடந்த 2015-ம் ஆண்டு தேவசகாயம் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் பெயர் இடம் பெறவில்லை.
இதையடுத்து செந்தில் பாலாஜி, சகோதரர் அசோக்குமார் உட்பட 40 பேர் மீது 2016-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்தது. அமலாக்கத்துறை செந்தில் பாலாஜிக்கு அனுப்பிய சம்மன் அனுப்பியது. அதனை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
கடந்த 2021-ம் ஆண்டு திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பொறுப்பேற்றார். சிறப்பு புலனாய்வு விசாரணை தேவை என உச்சநீதிமன்றத்தை அமலாக்கத்துறை நாடியது.
தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனு தொடர்ந்தார்.
இந்த வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு ஜூன் 13-ந்தேதி செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அடுத்த நாளே செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
ஜாமின் கேட்டு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தொடர்ந்தார். அவருக்கு நீதிமன்றக் காவல் 58 முறை நீட்டிக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 8-ந்தேதி செந்தில் பாலாஜி மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
15 மாதங்களுக்கு பிறகு கடந்த செப்.26-ந்தேதி செந்தில் பாலாஜியை உச்சநீதிமன்றம் கடும் நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது.
இதையடுத்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜி விடுதலையாகி வெளியே வந்தார்.