search icon
என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    சிறப்பு வகுப்புக்கு வரும் மாணவர்களை ஊக்கப்படுத்த வாழை இலையில் முட்டையுடன் சிக்கன் பிரியாணி: பள்ளி ஆசிரியர் அசத்தல்
    X

    சிறப்பு வகுப்புக்கு வரும் மாணவர்களை ஊக்கப்படுத்த வாழை இலையில் முட்டையுடன் சிக்கன் பிரியாணி: பள்ளி ஆசிரியர் அசத்தல்

    புதுவை சூரமங்கலம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி கல் மண்டபம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இப்பள்ளி மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதற்காக இவர் சிறப்பு வகுப்புகளை நடத்த ஏற்பாடு செய்துள்ளார். இந்த சிறப்பு வகுப்புகளுக்கு வரும் மாணவர்களுக்கு வாழை இலை போட்டு முட்டையுடன் சிக்கன் பிரியாணி வழங்கியுள்ளார். இது மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×